145) குந்தள குமாரி சபத்
குந்தள குமாரி சபத் (கி.பி.1901-1938) :
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் தனது கவிதைகளால் நாட்டுபற்றையும் விடுதலை உணர்வையும் கொழந்து விட்டு எரிய செய்த வீரப்பெண்மணி. ஒரியாவின் நைட்டிங்கேல் என்றும் புல்புல் என்றும் அழைக்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலில் படி ஒரியா மக்களின் மனங்களில் சுதந்திர கனலை தன் கவிதைகளால் எழுப்பினார்.
இவர் கி.பி.1901ல் ஒரிசாவில் அன்றைய பஸ்தூர் மாநிலம் ஜக்தல்பூர் என்னுமிடத்தில் (இந்த இடம் இப்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது) பிறந்தார். இவரது தந்தை டேனியல் சபத் தாயார் மோனிகா சபத். இந்து பிராமணரான இவரது குடும்பத்தில் மருத்துவரான இவரது தந்தை இவர் பிறப்பதற்கு முன்பே கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். இவரது தந்தை கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய காரணம் தெரியவில்லை. பின்னர் இவரது பெற்றோருடன் சிறுவயதிலையே பர்மாவுக்கு குடிபெயர்ந்தார். பின்னர் இவரது தந்தை பர்மாவிலையே இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய இவரது தாயும் இவரும் இவரது 14வது வயதில் ஒரிஸ்ஸா வந்து குர்தாவில் குடியேறினர். இவரது தாய் கல்வி பெறாதவராக இருந்தாலும் அவரது விடாமுயற்சியால் இவர் ராவன்பூரில் உள்ள பெண்கள் பள்ளியில் படிப்பை முடித்து கட்டாக்கில் உள்ள மருத்துவ கல்லூரியில் கி.பி.1921ல் தங்க பதுக்கத்துடன் LMP (உரிம மருத்துவ பயிற்சியாளர்கள்) பட்டத்துடன் டாக்டர் கைலாஷ் சந்திராவின் வழிகாட்டுதலில் மருத்துவ பயிற்சியை தொடங்கினார். இவர் ஒரியா, ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் மற்றும் பர்மிய மொழியில் சரளமாக பேசும் திறமையுடையவராக இருந்தார். கி.பி.1925வரை 4 வருடங்கள் மருத்துவ பயிற்சியில் இருந்துவிட்டு கட்டாக்கில் சொந்த மருத்துவ பயிற்சியை ஆரம்பித்தார். கி.பி.1925ல் கட்டாக்கில் செஞ்சிலுவை சங்கத்தின் மகளிர் நல மையத்தை ஆரம்பித்தார். பின்னர் கி.பி.1928ல் டெல்லிக்கு சென்றார். இவர் கி.பி.1928ல் கிருஷ்ண பிரசாத் பிரம்மாச்சாரியை மணந்து கொண்டார். கணவரை பின்பற்றி ஆரிய சமாஜத்தை பின்பற்றினார்.
இந்திய தேசிய விடுதலைக்காக மகாத்மா காந்தியின் பின்னால் நின்று பெண்களை போராட ஊக்குவித்தார். கவிதைகள் எழுதியும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இவரது கவிதைகளான அஹ்வான் மற்றும் கடஜத கிரிஷாகா மலரையும் உணர்வுபூர்வமாக தூண்டியது. சாதி பாகுபாடுகளுக்கு எதிராக பாடுபட்டார். பெண் பாகுபாடு மற்றும் குழந்தை திருமணம் ஆகியவற்றிற்கு எதிராக எழுதினார். ஒரியா மற்றுமில்லாமல் இந்தியிலும் எழுதினார். மகாவீர், ஜுவனா, நாரி பாரதி போன்ற இதழ்களை தொகுத்தும் வழங்கினார். இவர் ஒரியா மொழியின் வளர்ச்சிக்காக "பாரதிய தபோவன் சங்கம்" என்ற சங்கத்தை ஏற்படுத்தினார். சமூகத்தில் விதவைகள் மறுமணத்திற்காக குரல் எழுப்பி அவர்களின் மறுமணத்தை ஆதரித்தார். இவர் எழுதிய பல கவிதைகள் ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவரின் இலக்கிய சேவைகளுக்காக பல நிறுவனங்களால் பாராட்டப்பட்டார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பேச அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். கி.பி.1938 ஆகஸ்ட் 23ல் சுதந்திர இந்தியாவை காணாமலே மறைந்தார்.

Comments
Post a Comment