Posts

150) ஆண்டாள்

Image
 தென்னிந்தியாவில் பக்தி இயக்கத்தின் முன்னோடியாகவும் பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒரே பெண் ஆழ்வாராக அறியப்பட்டவர் தான் கோதை நாச்சியார் என்றழைக்கப்படும் ஆண்டாள் அவர்கள். பிறந்தது முதல் திருமாலையே தனது கணவராக வரித்துகொண்டு வாழ்ந்தவர். இவர் பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒருவராக திகழ்ந்தவர். பண்ணிட்டு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் இவரே. ஶ்ரீவில்லிபுத்தூரில் தீவிர விஷ்ணு பக்தரான பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டவர். திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகிய பக்தி பாடல்களின் தொகுப்பை வழங்கியவர். இன்றும் அவை மார்கழி மாதத்தில் பஜனைகளில் பாடப்படுகின்றன என்பது சிறப்பு.  கிபி 8ம் நூற்றாண்டில் கிபி 785ல் இன்றைய ஶ்ரீவில்லிபுத்தூரில் விஷ்ணு சித்தன் என்று முதலில் அழைக்கப்பட்ட பெரியாழ்வாரால் ஆண்டாள் கோயிலுக்குள் அமைந்த துளசி தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணாக அறிமுகமாகிறார். குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த பெரியாழ்வாருக்கு வளர்ப்பு மகளாக துளசி தோட்டத்தில் கண்டெடுத்த மகளுக்கு கோதை என்று பெயரிட்டார். ஒவ்வொரு நாளும் பெரியாழ்வார் தோட்டத்து மலர்களை கட்டி விஷ்ணுவுக்கு மாலை சாத்துவது வழக்கம். கோதை கடவுளுக்கு அந...

பொருளடக்கம்

 001 அனார்கலி 002 நூர்ஜஹான்  003 மீராபாய் 004 சாவித்திரி புலே 005 ஹடி ராணி 006 ராணி துர்காவதி 007 நைய்கி தேவி (நாயகி தேவி) 008 ஜான்ஸி ராணி லெட்சுமிபாய் 009 சுல்தான் ரஸியா பேகம் 010 ராணி பத்மினி  011 ஜல்காரி பாய் 012 ராணி அவந்திபாய்  013 பேகம் ஹஸ்ரத் மஹால் 014 மங்கையர்க்கரசி நாயனார் 015 அஹில்யாபாய் ஹோல்கர்  016 சுவான்பாய் போன்ஸ்லே 017 குந்தவை பிராட்டியார் 018 ஜூனத் மஹால் 019 பன்னா பாய் தா கிளர்ச்சி 020 ராணி ருத்திரமாதேவி 021 இராணி மங்கம்மாள்  022 இராணி மீனாட்சி  023 இராணி கிட்டப்பா 024 கேலடி சென்னம்மா 025 கிரண்தேவி ரத்தோர்  026 மும்தாஜ் பேகம் 027 ஜஹனாரா பேகம் 028 ஜெப்-உன்னிஸா பேகம் 029 ஹமீதாபானு பேகம் 030 இராணி சம்யூக்தா 031 மஸ்தானி 032 இராணி ரூப்மதி 033 குயிலி  034 அலமேலு மங்கம்மாள்  035 இராஜகுமாரி அம்ரூத் கவுர்  036 உதா தேவி 037 மேடம் காமா  038 அருணா ஆஸப் அலி 039 ஆனந்தி கோபால் ஜோஷி  040 அன்னா சாண்டி  041 சரளா தாக்கரல்  042 கடம்பினி கங்குலி  043 சரளாதேவி செளதுராணி 044 சுதேச கிருபாளினி  045 உஷா மேத்தா 04...

முன்னுரை

 சரித்திர நினைவலைகள் தொகுதியை எழுதும்போது விடுபட்ட பகுதிகளை தேடும்போது ஆண்களோடு ஆண்களுக்கு சற்றும் சளைக்காமல் இந்திய சுதந்திர போராட்ட களத்தில் பெண்களும் பங்கு பெற்றது அறிய வந்தது. ஆனால் அவர்கள் சரித்திரத்தில் அதிகம் அறியப்படாத அவர்களின் தியாகங்கள் பெரிதும் தெரியாமலும் இருந்தது. சுதந்திர போராட்டம் மட்டுமல்ல கலை,பக்தி, இலக்கியம், மருத்துவம், சட்டம், சமூக சேவைகள் மற்றும் விமானியாகவும் சாதனைகள் படைத்த விவரங்களும் அதை அவர்கள் அடைய சமூகத்தில் இருந்த இடர்பாடுகளும் அதை தகர்த்தெறிந்து தங்களது லட்சியத்தை அடைந்த வீர மங்கைகளையும் அவர்களின் வாழ்க்கையையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத ஆரம்பித்ததே இந்த தொடர். இதில் இந்தியா வரலாற்றில் தனது பங்களிப்பை சிறந்த முறையில் செய்த 149 பெண்மணிகளை பற்றி அனார்கலி முதல் அன்னை தெரசா வரை இங்கு எழுதியுள்ளேன். மதுரை குஞ்சரத்தம்மாள் கற்பனை என்பதால் அதற்கு தனி கட்டுரை எண் கொடுக்கவில்லை. இன்னும் தேடல்கள் தொடர்ந்தால் கிடைக்கும் தகவல்களையும் திரட்டி எழுதவும் ஆவல். உண்மையில் அனார்கலி என்பது கற்பனையான கேரக்டரா? அல்லது வரலாற்றில் அவரை பற்றிய செய்திகள் முழு...

149) அன்னை தெரசா

Image
அன்னை தெரசா (கி.பி.1910-1997) : இந்திய வரலாற்றில் தன்னலமற்ற சேவைகளுக்காக பாராட்டப்பட்ட பெண் ஆளுமைகளில் இவர் முதன்மையானவர். அயல்நாட்டு பெண்ணாக இருந்தாலும் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை இந்தியாவிலையே கழித்தவர். இந்திய ஏழை மக்களின் சேவைகளுக்காகவும் ஆதரவற்றோர் கொடும் நோயால் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்ட நோயாளிகளுக்காவும் தனி இல்லம் அமைத்து அவர்களின் பராமரிப்பை மேற்கொண்டவர். எண்ணற்ற நாடுகள் இவருக்கு தங்கள் குடியுரிமையை அளித்தாலும் இந்தியாவையே தன் வீடாக நினைத்தவர். இறந்த பின்னர் கத்தோலிக்க சபையினரால் "புனிதர்" பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டவர். இவர் கி.பி.1910 அல்பேனியாவில் ஸ்கோப்ஜி நகரில் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் அஞ்சேஸே (ஆக்னஸ்) கோன்ஜா போஜாஜியூ என்பதாகும். இவரது தந்தை நிக்கல் நிகோலா மற்றும் தாய் போஜாஜியூ திரானி பெர்னாயின் ஆகியோருக்கு 3வது மகளாக பிறந்தார். இவரது மூத்த சகோதரி பெயர் அகா மற்றும் மூத்த சகோதரர் பெயர் லாகஸ் என்பதாகும். தற்போது இவர் பிறந்த நகரம் வடக்கு மாசிடோனியாவின் தலைநகராக உள்ளது. இவரது தந்தை இவரது 8 வயதில் நோய்வாய...

148) உமாபாய் குந்தாப்பூர்

Image
உமாபாய் குந்தாப்பூர் (கி.பி.1892-1992) : இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றவர் இவர். காந்தியடிகளின் அறவழியை பின்பற்றியவர். சுதந்திர போராட்ட வீரர்களுக்கு உணவும் பணமும் தங்க இடமும் அளித்தவர். இவர் உப்பு சத்தியாகிரகத்தில் சிறைப்பட்ட சமயத்தில் இவரது மாமியார் இறந்த நிகழ்வும் 1 வாரம் கழித்தே தெரிந்தது. காந்தியின் போராட்டங்களை செயல்படுத்தியவர். இவர் கி.பி.1892 மார்ச் 25ல் மங்களூரில் கிருஷ்ணராவ் கோலிகேரி மற்றும் ஜம்னாபாய் தம்பதிகளுக்கு மகளாக பவானி கோலிகேரி என்ற இயற்பெயருடன் பிறந்தார். இவருக்கு மொத்தம் 4 சகோதரர்கள் உண்டு. இவர்கள் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. இவருக்கு 13 வயதில் சஞ்சீவ் ராவ் குந்தாப்பூர் என்பவருடன் திருமணம் நடந்தது. இவரது மாமனாரான ஆனந்த் ராவ் குந்தாப்பூர் சமூக சீர்திருத்தவாதி. பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவராக இருந்ததால் மாமனாரின் ஆதரவினால் பள்ளியில் சேர்ந்து மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர் தனது மாமனாருடன் சேர்ந்து மும்பை கவுன் தேவி மகிளா சமாஜ் மூலம் பெண்களுக்கு கல்வி கற்பித்தார். இவரது 31வது வயதில் இவரது கணவர் காச நோய...

147) ருக்மணி லட்சுமிபதி

Image
ருக்மணி லட்சுமிபதி (கி.பி.1892-1951): இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்த பெண்களுக்கு மத்தியில் இவரும் ஒருவர். இவர் இந்திய சுதந்திர போராட்ட களத்தில் தீவிரமாக பங்கு கொண்டது மட்டுமல்லாது சென்னை மாகாணத்தின் முதல் பெண் கேபினட் அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கி.பி.1892 டிசம்பர் 6ல் ஒரு விவசாய குடும்பத்தில் சீனிவாசராவ்-சூடாமணி தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவரது தாத்தா ராஜா டி.ராம்ராவ் ஜமீன்தாராக இருந்தார். அந்த காலத்தில் பால்ய விவாகம் நடைபெற்று வந்ததால் இவரது தந்தையும் இவருக்கு பால்ய விவாகத்திற்கு மணமகனை தேடினார். அந்த நேரத்தில் வீரேசலிங்கம் பந்தலு என்ற சுதந்திர போராட்ட வீரர் இவரின் தந்தையிடம் பால்ய விவாகத்தின் மூலம் ஏற்படும் தீமைகளை எடுத்து கூறி அந்த முடிவினை கைவிட வைத்தார். அவர் தனது மருமகள் ராஜாமணி என்பவருடன் இவரையும் பள்ளிக்கு கல்வி பயில தந்தையிடம் அறிவுரை கூறி பள்ளிக்கு அனுப்பினார். இந்த வீரேசலிங்கம் பந்தலு அவர்களின் அறிவுரையினால் இவர் பிற்காலத்தில் சுதந்திர போராட்ட களங்களில் பங்கு பெற்றார். பள்ளி படிப்பு முடிந்ததும்  இவருக்கு உடல்நலம் சரியில...

146) அம்மு சுவாமிநாதன்

Image
அம்மு சுவாமிநாதன் (கி.பி.1894-1978) இந்திய வரலாற்றில் தங்களது தியாகத்தாலும் திறமையினாலும் இடம்பிடித்த பெண்மணிகளுள் அம்மு சுவாமிநாதனும் ஒருவர். சுதந்திர போராட்ட களத்திலும் பெண்ணீயம் தொடர்பான போராட்டஙக்ளிலும் மட்டுமல்லாது அரசியல் நிர்ணய சபைகளில் பங்கு கொண்டு இந்திய அரசியல் சட்ட நிர்ணயத்தில் குறிப்பிடத்தக்க பங்கை வகித்தவர் இவர். அம்மு குட்டி மேனன் இன்றைய கேரளாவில் பாலக்காட்டில் அனக்கராவில் ஒரு வடக்காத் மேனன் குடும்பத்தில் ஏப்ரல் 22 கி.பி.1894ல் பிறந்தார். தாய் தந்தை இருவரும் நாயர் குடும்பத்தை சேர்ந்தவர்கள். 9 பெண் குழந்தைகள் உட்பட 13 குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் இவர் இளையவர். இவரது சிறுவயதிலையே இவரது தந்தையார் மறைந்தார். இவரது தாயார் ஒவ்வொரு குழந்தைகளின் திருமணத்திற்காகவும் தினசரி வாழ்க்கைக்கும் போராடி இவர்களை வளர்த்தார். அதனால் இவர் சிறு வயதில் பள்ளிக்கு செல்லவில்லை. ஆனாலும் மலையாள மொழியை எழுத படிக்க தெரிந்த அளவிலையே இவரது கல்வி இருந்தது. இவரது 13 வயதில் கேரள ஐயர் குடும்பத்தை சேர்ந்த சுவாமிநாதன் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இவரது கணவர் இவரது தந்தையின் நண்பர் . அதனால் அவர...