149) அன்னை தெரசா
அன்னை தெரசா (கி.பி.1910-1997) : இந்திய வரலாற்றில் தன்னலமற்ற சேவைகளுக்காக பாராட்டப்பட்ட பெண் ஆளுமைகளில் இவர் முதன்மையானவர். அயல்நாட்டு பெண்ணாக இருந்தாலும் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை இந்தியாவிலையே கழித்தவர். இந்திய ஏழை மக்களின் சேவைகளுக்காகவும் ஆதரவற்றோர் கொடும் நோயால் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்ட நோயாளிகளுக்காவும் தனி இல்லம் அமைத்து அவர்களின் பராமரிப்பை மேற்கொண்டவர். எண்ணற்ற நாடுகள் இவருக்கு தங்கள் குடியுரிமையை அளித்தாலும் இந்தியாவையே தன் வீடாக நினைத்தவர். இறந்த பின்னர் கத்தோலிக்க சபையினரால் "புனிதர்" பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டவர். இவர் கி.பி.1910 அல்பேனியாவில் ஸ்கோப்ஜி நகரில் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் அஞ்சேஸே (ஆக்னஸ்) கோன்ஜா போஜாஜியூ என்பதாகும். இவரது தந்தை நிக்கல் நிகோலா மற்றும் தாய் போஜாஜியூ திரானி பெர்னாயின் ஆகியோருக்கு 3வது மகளாக பிறந்தார். இவரது மூத்த சகோதரி பெயர் அகா மற்றும் மூத்த சகோதரர் பெயர் லாகஸ் என்பதாகும். தற்போது இவர் பிறந்த நகரம் வடக்கு மாசிடோனியாவின் தலைநகராக உள்ளது. இவரது தந்தை இவரது 8 வயதில் நோய்வாய...