139) பெயர் தெரியாது (அர்ஜூன் சிங்கின் தியாகத்தாய்)
பெயர் தெரியவில்லை (அர்ஜூன் சிங் தாய்) : இந்திய வரலாற்றில் எத்தனையோ பெண்கள் தங்களின் தியாகத்தினாலும் வீரத்தினாலும் நாட்டுபற்றினாலும் உயர்ந்து நிற்கின்றனர். அவர்களுள் ஒருவராக நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்த இன்றைய ஹரியானாவிலுள்ள அர்ஜூன் சிங் என்பவரின் தாய். நேதாஜி பர்மாவில் இருந்த சமயம் இந்திய தேசிய இராணுவத்திற்கு ஆள் எடுக்க அறிவிப்பு விடுத்தார். "சுதந்திரத்திற்கு விலையாக நம் இரத்தத்தை கொடுப்போம்" என்று ரேடியோவில் அறிவிப்பு கொடுத்தார்.ஆசாத் ஹிந்த் படைக்கு கேப்டன் தில்லான் என்பவரை நியமித்து இளைஞர்களை படைக்கு ஆள் எடுக்க சொன்னார். அப்போது தாய்க்கு ஒரே மகனாக இருந்தால் படைக்கு எடுக்க வேண்டாம் என்று உத்தரவு அனுப்பினார். அதன்படி ஆள் எடுத்துக்கொண்டு இருந்தனர். இந்த நேரத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வரிசையில் காத்திருந்தனர். அவர்களுள் ஒருவராக அர்ஜூன் சிங் என்பவரும் இருந்தார். அவரை கேப்டன் தில்லான் விசாரிக்கும்போது அவர் தந்தையை இழந்தவர். தாயின் ஒரே மகன் என்றும் மாடுகளை வைத்து பிழைப்பு நடத்துவதாக கூறவும் கேப்டன் தில்லான் அவரிடம் உன்னுடைய தேச பக்தி குறைவில்லாத...