Posts

Showing posts from June, 2025

150) ஆண்டாள்

Image
 தென்னிந்தியாவில் பக்தி இயக்கத்தின் முன்னோடியாகவும் பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒரே பெண் ஆழ்வாராக அறியப்பட்டவர் தான் கோதை நாச்சியார் என்றழைக்கப்படும் ஆண்டாள் அவர்கள். பிறந்தது முதல் திருமாலையே தனது கணவராக வரித்துகொண்டு வாழ்ந்தவர். இவர் பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒருவராக திகழ்ந்தவர். பண்ணிட்டு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் இவரே. ஶ்ரீவில்லிபுத்தூரில் தீவிர விஷ்ணு பக்தரான பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டவர். திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகிய பக்தி பாடல்களின் தொகுப்பை வழங்கியவர். இன்றும் அவை மார்கழி மாதத்தில் பஜனைகளில் பாடப்படுகின்றன என்பது சிறப்பு.  கிபி 8ம் நூற்றாண்டில் கிபி 785ல் இன்றைய ஶ்ரீவில்லிபுத்தூரில் விஷ்ணு சித்தன் என்று முதலில் அழைக்கப்பட்ட பெரியாழ்வாரால் ஆண்டாள் கோயிலுக்குள் அமைந்த துளசி தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணாக அறிமுகமாகிறார். குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த பெரியாழ்வாருக்கு வளர்ப்பு மகளாக துளசி தோட்டத்தில் கண்டெடுத்த மகளுக்கு கோதை என்று பெயரிட்டார். ஒவ்வொரு நாளும் பெரியாழ்வார் தோட்டத்து மலர்களை கட்டி விஷ்ணுவுக்கு மாலை சாத்துவது வழக்கம். கோதை கடவுளுக்கு அந...