106) ஜானகி அதி நாகப்பன்

ஜானகி அதி நாகப்பன் (என்ற) ஜானகி தேவர் (கி.பி.1925-2014) :


பிறந்தது வளர்ந்தது வாழ்நத்து மலேஷியா என்றாலும் பூர்வீக தாய்மண்ணாக தமிழகத்தை கொண்டவராகவும் தாய் மொழியாக தமிழை கொண்டவர் என்பதாலும் இந்திய சுதந்திர போராட்டத்தின் இறுதி கட்டத்தில் நேதாஜி இந்திய தேசிய இராணுவத்தை வெளிநாடுகளில் அமைத்த போது அதில் தனது 18வது வயதில் இணைந்து ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக போராடியவர் இவர்.

கி.பி.1925 பிப்ரவரி 25ல் மலேஷியாவின் கோலாலம்பூரில் வசதியான தமிழ் குடும்பத்தில் பிறந்தார். சுபாஷ் சந்திரபோஸ் கி.பி.1941-42களில் மலேஷியா சிங்கப்பூர் வாழ் இந்தியர்களிடம் இந்திய சுதந்திர போராட்டத்திற்காக உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். இதனை கேட்ட 16 வயதான ஜானகி தனது தங்க காதணிகளை கழட்டி கொடுத்தார். இந்திய தேசிய இராணுவத்தில் இணைய விரும்பிய இவரை இவரின் தந்தை மற்றும் குடும்பத்திடம் இருந்து வந்த எதிர்ப்புகளை சமாளித்து இந்திய தேசிய இராணுவத்தில் மகளிர் பிரிவில் இணைந்தார். ஆடம்பரமாக செல்வ செழிப்புடன் வளர்ந்த இவரால் இராணுவ வாழ்வுக்கு ஏற்ப ஆரம்பத்தில் தடுமாறினாலும் சமாளித்து இராணுவ வாழ்வின் கடுமைக்கு தன்னை பழக்கி கொண்டார். இராணுவ படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக உயர்ந்தார். படைப்பிரிவின் இரண்டாவது தலைவராக உயர்ந்தார். போரில் ஜப்பான் தோல்வியுற ஆரம்பித்த நேரத்தில் இந்திய படைப்பிரிவின் பெண்கள் பிரிவை பத்திரமாக கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பை ஏற்றார். இரண்டாம் உலக போருக்கு பின்னர் பொதுநல ஆர்வலராக மாறினார். கி.பி.1946ல் மலேயா இந்திய காங்கிரஸை ஜானகி மற்றும் அதி நாஹப்பன் என்பவர் உதவியுடன் ஜான் திவி நிறுவினார். இந்த அதி நாகப்பன் என்பவரை தான் ஜானகி தேவர் பின்னாட்களில் மணந்தார். இந்திய அரசு கி.பி.2000ல் இவருக்கு பத்மஶ்ரீ விருதை வழங்கி கெளரவித்தது. கி.பி.2014 மே 9ல் நிமேனியா காய்ச்சல் காரணமாக தனது 89வது வயதில் மலேஷியாவில் உள்ள கோலாலம்பூரில் இவர் மறைந்தார். இந்திய மண்ணை தாய்மண்ணாக கொண்டு பிறப்பால் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட இவர் வெளிநாட்டில் இருந்தாலும் தனது இளமை பருவத்தில் 16வது வயதில் நாட்டுக்கு உழைக்கும் தியாக உள்ளத்துடன் போராட்ட களத்தில் இறங்கி நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட பெண்மணிகளுடன் உயர்ந்த இடத்தில் நிற்கிறார்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்