113) நீரா ஆர்யா
நீரா ஆர்யா (கி.பி.1902-1998) :
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட எத்தனையோ வீர பெண்மணிகளுள் இவரும் ஒருவர். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் உளவு அதிகாரியாக பணிபுரிந்தவர். இவரது கணவர் ஆங்கிலேயரின் உளவு அதிகாரியாக பணிபுரிந்தவருக்கு நேதாஜியை கொல்லும் பணி தரப்பட்டது. நேதாஜிக்கு வைத்த குறி தவறி அவரின் ஓட்டுநர் தாக்குதலில் மரணமடைந்தார். தனது கணவரே இதற்கு காரணம் என்று உணர்ந்த இவர் கணவரை கத்தியால் குத்தி கொன்றார். இதனால் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்ட இவரின் மார்புகளை அறுத்து சித்தரவதை செய்யப்பட்ட போதும் நேதாஜியை காட்டி கொடுக்கவில்லை. இப்படிப்பட்ட தியாக உள்ளம் தான் நீரா ஆர்யா என்ற இந்த வீர பெண்மணி.
கி.பி.1902 மார்ச் 5ல் இன்றைய உத்திர பிரதேசத்திலுள்ள கெக்ரா நகரில் வசதியான தொழிலதிபர் சேத் சாஜூமாலுக்கு மகளாக பிறந்தார். இவர் தனது ஆரம்ப கல்வியை கொல்கத்தாவில் படித்தார். இவர் தந்தை தொழிலதிபராக இருந்ததால் அவருடன் பல வெளிநாடுகளுக்கு தொழில் தொடர்பாக சென்று வந்ததால் இவருக்கு பல மொழிகள் அத்துபடியாகியது. அது மட்டுமல்ல உள்நாட்டிலும் இவரது தந்தைக்கு தொழில் வாய்ப்புகள் இருந்ததால் பல மொழிகளை சரளமாக பேசும் திறமை பெற்றிருந்தார். இவருக்கும் ஶ்ரீகாந்த் ஜெய்ரஞ்சன் தாஸ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவரது கணவர் பிரிட்டிஷ் அரசின் இரகசிய உளவாளி. அவருக்கு தன் மனைவி நேதாஜியின் படைபிரிவில் ரகசிய உளவாளியாக பணி செய்தது தெரிய வந்தது ஆச்சர்யத்தை அளித்தது.
இவரது கணவருக்கு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸை தீர்த்துகட்டும் வேலை கொடுக்கப்பட்டது. கணவர் இவரிடம் நேதாஜியை கொலை செய்யுமாறு கூற இவர் மறுத்து விட்டார். பின்னர் நேதாஜி இருக்குமிடத்தை காட்டுமாறு கூறினார். அதற்கு நாட்டை காட்டி கொடுக்கும் ஈன செயலை செய்யமாட்டேன் என்று கூறிவிட்டார். கணவர் நேதாஜியை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டதில் நேதாஜியின் கார் டிரைவர் பலியானார். நேதாஜியின் மீது கொலை தாக்குதல் நடந்தியது தனது கணவர் தான் என்பதை அறிந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் நேதாஜி இந்த நிகழ்வை அறிந்து இவரின் தியாக உள்ளத்தை வியந்து இவர் ஆங்கில காவல்துறையினரால் பிடிக்கப்பட்டதை அறிந்து மனம் வருந்தினார்.
டெல்லியில் விசாரணையின் முடிவில் இவரது குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக அந்தமான் (காலா பானி) சிறைக்கு அனுப்பப்பட்டார். அங்கு தனியறையில் இவர் கை கால்களில் சங்கிலியால் பிணைக்கப்பட்டும் கழுத்திலும் கம்பி வளையம் மாட்டப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். ஒருநாள் இரும்பு கொல்லன் இவரது கையில் இருந்த வளையங்களை அகற்றும்போது கையில் தசைப்பகுதியை வெட்டப்பட்டு சதை பிய்ந்தது. வலியை பொறுத்துக் கொண்டார். பின்னர் காலில் உள்ள வளையங்களை அகற்றும்போது 3,4 முறை இவரது கால் எலும்பு தாக்கப்பட்டது. இரும்பு கொல்லனிடம் உனக்கு என்ன கண் தெரியாதா? நீ என்ன குருடனா? எப்படி பெண்ணிடம் நடப்பது என்று தெரியாதா? என்று வினவ அருகிலிருந்த ஆங்கில அதிகாரி இவரிடம் நேதாஜி எங்கே இருக்கிறார் என்று வினவினார். அவரின் இருப்பிடத்தை கூறினால் இவரை விடுதலை செய்வதாகவும் ஆங்கில ஜெயிலர் ஆசை காட்டினார். அதற்கு இவர் நேதாஜி தான் இறந்து விட்டதாக செய்தி வந்ததே பிறகு எப்படி அவர் எங்கிருக்கிறார் என்று எனக்கு எப்படி தெரியும்? என்று பதில் கூற ஆங்கில அதிகாரி மீண்டும் எங்கே இருக்கிறார்? என்று வினவினர். நேதாஜி எங்கள் இதயங்களில் நிறைந்து உள்ளார் என்று பதிலுரைக்க ஆங்கில ஜெயிலர் இவரது உடைகளை களைந்து இரும்பு கொல்லனிடம் ஒரு பக்க மார்பகத்தை வெட்டி எறிய உத்தரவிட்டார். அவனும் அவ்வாறே இவரது வலது மார்பகத்தை வெட்டி எறிய இரத்த போக்குடன் கிடந்த இவரிடம் மீண்டும் வினவ அதே பதிலை சொல்ல இடது மார்பகத்தையும் வெட்டி எறிந்தனர். ஆனாலும் இவர் எந்த பதிலையும் கூறவில்லை. அந்தமான் சிறையில் அதன் பின்னரும் இவருக்கு தொடர்ச்சியான சித்திரவதைகள் தொடர்ந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் அந்தமான் சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டவுடன் இவரும் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் ஹைதராபாத் நகரில் தெருவோரத்தில் பூக்கள் விற்று தன் வாழ்நாளை நடத்தினார். இவரது குடிசை அரசின் விதிமுறையை மீறி புறம்போக்கு நிலத்தில் கட்டப்படுள்ளதாக கூறி அதிகாரிகள் இவரது குடிசையையும் இடித்தனர். நாட்டிற்காக தனது சொத்துகளை தேச விரோதியான கணவரை கொன்று தனி சிறையில் சித்திரவதையில் மார்பகங்கள் அறுக்கப்பட்டும் நாட்டையும் அதன் தலைவரையும் காட்டி கொடுக்காமல் தண்டனையை அனுபவித்த இவரின் கடைசி காலத்தில் வசித்து வந்த குடிசையையும் சுதந்திர இந்தியாவில் இடிக்கப்பட்டது தான் மிககொடுமை. கி.பி.1998 ஜூலை 26ல் தனது 96வது வயதில் ஹைதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் உயிர் துறந்தார். நாட்டிற்காக சுதந்திர போராட்ட தலைவரை காட்டி கொடுக்க மறுத்து அவரை கொல்ல நினைத்த தன் கணவரை கொன்று சிறையில் சித்திரவதைகள் அனுபவித்தும் நாட்டுப்பற்றே ஒன்றையே தனது உயிர்மூச்சாக கொண்டு இருந்தவர் தான் இந்த தியாக பெண்மணி நீரா ஆர்யா. இவரின் தியாகத்தை போற்றுவோம்



Comments
Post a Comment