119) சூர்யா தேவி & பரிமள் தேவி

சூர்யா தேவி, பரிமள்‌ தேவி (???? - கி.பி.715)


சரித்திரத்தில் எத்தனையோ பெண்கள் தங்கள் தியாகத்தாலும் நாட்டுபற்றினாலும் இடம்பெற்றுள்ளனர். அவர்களுள் சகோதரிகள் இருவரும் தங்கள் இராஜ்ஜியத்தை அழித்து தங்கள் தாய் தந்தையர்களை கொன்ற தளபதியை வஞ்சகத்தால் அவரது அரசரால் கொல்லுவதற்கு காரணமாக இருந்து தங்களின் நோக்கம் நிறைவேறியதும் பழிவாங்கிய திருப்தியில் உயிரோடு சமாதியானார்கள்.

கி.பி.7ம் நூற்றாண்டின் மத்தியில் சிந்து பகுதியின் சாச் வம்ச ஆட்சி நடைபெற்று வந்தது. ராய் வம்சத்தின் கடைசி அரசரான ராஜா ஷாஹஸியின் மறைவுக்கு பின்னர் அரசி சுஹநாடியை பிராமணனான மந்திரி சாச் மணந்து கொண்டு சாச் வம்ச ஆட்சியை ஆரம்பித்தார். அவருக்கு பின்னர் அவரது மகனான தாஹிர் சென் மற்றும் தஹர்சியா ஆகியோர்கள் சிந்துவை பிரித்து ஆண்டனர். தாஹிர் சென் அலோரில் இருந்து மேல் சிந்துவையும் தஹர்சியா தற்போதைய நவாப்ஷாவுக்கு அருகிலுள்ள பிராமணாபாத்தில் இருந்தும் ஆண்டனர். ஏற்கனவே கி.பி.638ல் இருந்து பலமுறை அரேபியர்கள் படையெடுத்து தோல்வியை தழுவினர். இந்த நிலையில் இலங்கை மன்னரிடம் இருந்து உமையத் கலீபாவுக்கு சென்ற பரிசு பொருட்கள் அடங்கிய கப்பல் கடற்கொள்ளையால் தாக்கப்பட்டது. இதில் தாஹிர்சென்னுக்கும் தொடர்பு இருப்பதாக அரேபியர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தினர். உமையத் கலீபா தனது மருமகனான முஹம்மது பின் காஸிம் தலைமையில் படையை அனுப்பி வைத்தார். முதலில் பிராமணாபாத்தில் தஹர்சியா தோற்கடிக்கப்பட்டு பின்னர் அலோரில் நடந்த போரில் கி.பி.712ல் தாஹிர்சென் கொல்லப்பட்டார். தாஹிர் சென்னின் இன்னொரு மனைவியான ராணி பாய் ராவர் கோட்டையில் இருந்து அரேபிய படையெடுப்புகளை வெல்ல முடியாது என்று முடிவு செய்து ஜோஹர் (தன்னை தானே எரித்து கொள்ளுதல்) செய்து கொண்டு உயிர் விட்டார். தாஹிர் சென்னின்  மனைவியான லடி பாய் சிறைபிடிக்கப்பட்டார். அவரை முஹம்மது பின் காஸிம் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டார். தாஹிர் சென்னின் மகள்களான சூர்ய தேவி மற்றும் பரிமள் தேவி சிறைபிடிக்கப்பட்டு உமையத் கலீஃபா  சுலைமான் இபின் அப்துக்கு பரிசு பொருட்களாக டமாஸ்கஸ்க்கு அனுப்பப்பட்டனர். அங்கு திருமணம் ஆகாத கன்னிகளான இவர்கள் கலீஃபா விடம் தங்களிடம் அனுப்புவதற்கு முன்பு முஹம்மது பின் காஸிம் தங்களை நாசம் செய்துவிட்டார் என்று பொய் உரைத்தனர். இதனால் கோபம் கொண்ட கலீஃபா தனது மருமகனான முஹம்மது பின் காஸிம்மை எருதுகளின் தோலில் தைத்து சிரியாவுக்கு அனுப்பி வைக்க கட்டளையிட்டார். அதன்படியே அனுப்பப்பட்ட அவர் பாதி வழியிலையே மூச்சு திணறி இறந்தார். கலிஃபா அவரின் சடலத்தை சகோதரிகளிடம் காண்பிக்க தங்கள் இராஜ்யத்தை சீர்குலைத்த இவரை பழிவாங்கவே அவ்வாறு பொய்யுரைத்தோம் என்று கூறினர். இதனால் கோபம் கொண்ட கலிஃபா சகோதரிகளை ஒரு சுவரில் உயிருடன் பூசி கொல்ல உத்தரவிட்டதாகவும் தண்டனை அவ்வாறே நிறைவேற்றபட்டதாகவும் சாச்நாமா கூறுகிறது. தங்களின் இராஜ்யம் மற்றும் தாய் தந்தை மரணத்திற்கு பழிவாங்க தங்களின் உயிரை கூட பொருட்படுத்தாமல் பொய்யுரைத்து வஞ்சகத்தால் பழிக்குபழி வாங்கினர் சகோதரிகளான சூர்யா தேவி மற்றும் பரிமள் தேவி ஆகியோர்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்