124) பியாரி பீபி

பியாரி பிபீ (கி.பி.1922-???)


இந்திய விடுதலை போராட்டத்தில் எத்தனையோ பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஈடுபட்டு சிறை சென்ற முதல் முஸ்லீம் பெண்மணியாக கரூர் பியாரி பிபீ அறியப்படுகிறார். சொந்த சமுதாய மக்களால் விலக்கி வைக்கப்பட்டும் கர்ப்பிணியாக சிறையில் இருந்து கருச்சிதைவு ஏற்பட்டும் கலங்காது நாட்டு விடுதலையே முக்கியம் என்று போராடிய பெண்மணி இவர்.

இவர் கி.பி.1922ல் திண்டுக்கல்லில் காவல்துறை அதிகாரியாக இருந்த சையத் இஸ்மாயில் என்பவருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு சுதந்திர போராட்ட வீரர் நன்னா சாகிப்புடன் திருமணம் நடைபெற்றது. இவர் கணவருடன் சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டார். கி.பி.1941ல் இவர் 5 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது போராட்டத்தில் கலந்து கொண்டதால் சிறை வைக்கப்பட்டார். சிறையில் இவரது கருகருப்பும் ஏற்பட்டு போனது. முஸ்லீம் பெண்மணி போராட்டத்தில் கலந்து கொள்வதை விரும்பாத கரூர் நகர முஸ்லீம் மக்கள் இவரது போராட்டத்தை எதிர்த்தனர். இவரை போலீஸார் கைது செய்து அழைத்து செல்லும்போது கரூர் நகர முஸ்ஸீம் மக்கள் இவர் மீது கற்களை வீசி எறிந்தனர். ஜமாத்தில் இவரது குடும்பத்தை விலக்கி வைத்தனர். ஆனாலும் இவரது போராட்டத்திற்கு இவரது கணவரின் பரிபூரண ஒத்துழைப்பு இருந்தது.‌ பெரும்பாலும் சுதந்திர போராட்டங்கள் இருந்த காரணத்தால் இவரது கணவர் அனைத்து போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை தண்டனை பெற்றதாலும் தம்பதிகள் பெரும்பாலும் பிரிந்தே இருந்தனர். இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இவரின் இருப்பு விவரம் தெரியவில்லை‌. ஆனாலும் இந்திராகாந்தி பிரதமராக இருந்த நேரத்தில் இவரை டெல்லிக்கு அழைத்து இவரின் தியாகத்தை பாராட்டி வெள்ளி தட்டு பரிசாக வழங்கியதாக செய்திகள் உள்ளது. நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு அது சுதந்திரம் அடைந்ததும் அதன் பலனை அனுபவிக்காமல் தன்னலமற்ற தியாக உள்ளத்தினால் அதற்கான சலுகைகளை கூட பெறாமல் வாழ்ந்து மறைந்தார்.

Comments

Popular posts from this blog

135) கங்கா தேவி

137) காளி பாய்

முன்னுரை