13) பேகம் ஹஸ்ரத் மகால்
பேகம் ஹஸ்ரத் மகால் (கி.பி.1820-1879) :
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆண்களுக்கு சரிசமமாக வீரத்திலும் தியாகத்திலும் இணையாக பெண்களும் பங்கு கொண்டுள்ளனர். அத்தகையவர்களில் ஆவாத் (அயோத்தி) நவாப்பின் மகாராணியான பேகம் ஹஸ்ரத் மகாலும் ஒருவர். இவர் கி.பி.1820ல் ஆவாத் இராஜ்யத்தின் பகுதியான ஃபைசாபாத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் முஹம்மதி காணும் என்பதாகும். இவரது பெற்றோர்கள் ஈரானிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் இவர் நடன பெண்ணாக வாழ்க்கையை தொடங்கியதாகவும் ஆவாத் (அயோத்தி) நவாப்பான வாஜித் அலி ஷாவின் கவனத்தை ஈர்த்ததால் அவரது தனது அரண்மனைக்கு பணிபெண்ணாக அழைத்து சென்றார். பிறகு இவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிர்கிஸ் காதிர் என்ற மகன் கி.பி.1845ல் பிறந்தார். மகன் பிறந்த நேரத்தில் இவருக்கு அரண்மனையில் முக்கிய ராணிகளுக்கான பேகம் என்ற பட்டத்தை கொடுத்தார். அது முதல் இவர் பேகம் ஹஸ்ரத் மகால் என்று அழைக்கப்பட்டார்.
கி.பி.1856ல் பிரிட்டிஷ் அரசு இவரது கணவரான வாஜித் அலி ஷாவை பிரிட்டிஷ் அரசு கைது செய்து கல்கத்தா சிறையில் அடைத்தது. இதனால் பேகம் ஹஸ்ரத் மஹால் தன் மகனான பிர்கிஸ் காதிரை அரசனாக அறிவித்து அவருக்கு பதிலாக ஆட்சி புரிந்தார். கி.பி.1857ல் நடந்த சிப்பாய் புரட்சியின் போது இவரது ஆதரவாளர்கள் ராஜா ஜலால் சிங் தலைமையில் ஆங்கிலேய படைகளை எதிர்த்து தாக்கினார்கள். லக்னோவை தாக்கி கைப்பற்றி தனது மகனை அரசனாக்கி அவரது பாதுகாவலராக இருந்தார். இவர் பிரிட்டிஷ் அரசு தங்களின் வழிபாதைகளுக்காக கோயில்களையும் மசூதிகளையும் இடித்து தள்ளியதாக குற்றம் சாட்டினார். இவர் மராத்திய பேஷ்வா நானா சாகிப்புடன் இணைந்து சுதந்திர போராட்டங்களில் பங்கு கொண்டார். பின்னர் ஆங்கிலேயர்கள் லக்னோவை தாக்கி திரும்ப கைப்பற்றவும் இவரும் நானா சாகிப்புடன் நேபாள நாட்டிற்கு தப்பி சென்றார். ஆரம்பத்தில் இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க யோசித்த நேபாள அரசர் பின்பு அடைக்கலமாக அனுமதி கொடுத்தார். அங்கேயே கி.பி. 1879ல் மரணமடைய காட்மாண்டுவில் உள்ள ஜூம்மா மசூதியில் அடக்கம் செய்யப்பட்டார். இவர் மறைந்தவுடன் கி.பி.1887ல் விக்டோரியா மகாராணியின் வெள்ளி விழாவை முன்னிட்டு இவரது மகனான பிர்கிஸ் காதிரை இந்தியாவுக்கு வர ஆங்கிலேய அரசு அனுமதித்தது. கல்கத்தாவில் தங்கியிருந்த அவர் கி.பி.1893ல் அவரது உறவினர்களால் விஷமிட்டு கொல்லப்பட்டார்.
கி.பி.1984 மே 10ல் இந்திய அரசாங்கம் இவரது தபால்தலை வெளியிட்டு சிறப்பித்தது. சிறுபான்மையினர் நலத்துறை மைனாரிட்டி பிரிவை சேர்ந்த பெண்களுக்கு படிப்பதற்கு உதவித்தொகை வழங்குவதற்கு இவரது பெயரை சூட்டியது.

Comments
Post a Comment