130) கஸ்தூர்பா காந்தி

கஸ்தூர்பா காந்தி (கி.பி.1869-1944) :


இந்திய சரித்திரத்தில் இடம்பிடித்த பெண்களில் இவரும் முக்கியமானவர். மகாத்மா காந்தியின் மனைவி. அவரின் எல்லா போராட்டங்களிலும் துணை நின்றவர். தென்னாப்பிரிக்கா போராட்ட களத்திலும் உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட எல்லா போராட்டங்களிலும் காந்தியுடன் இணைந்து போராடியுள்ளார். அவரின் போராட்டங்களில் தோளோடு தோள் நின்று இணைந்து போராடியவர் இவர்.

இவர் கி.பி.1869 ஏப்ரல் 11ல் ( அட காந்திஜியின் மனைவி அவரை விட 6 மாதம் மூத்தவர் !!! ) இன்றைய குஜராத்தின் போர்பந்தர் நகரில் ஒரு பெரிய வணிக குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக பிறந்தார். காந்திஜிக்கு உறவுமுறை என்பதால் கி.பி.1883ல் இவருக்கும் காந்திஜிக்கு 13வது வயதில் திருமணம் நடந்தது. எழத படிக்க தெரியாத இவருக்கு காந்தியே எழுத படிக்க கற்று கொடுத்தார். கி.பி.1888ல் இலண்டனுக்கு மேல் படிப்புக்காக காந்திஜி சென்றபோது இவர் இங்கேயே இருந்தார். அந்த நேரத்தில் முதல் பிரசவம் என்பதால் செல்ல வில்லை என்று தெரிகிறது. தமப்திகளுக்கு ஹரிலால், மணிலால், ராம்தாஸ் மற்றும் தேவதாஸ் என்று 4 மகன்கள் பிறந்தனர். 

கி.பி.1897ல் காந்திஜி தொழில் காரணமாக தென்னாப்பிரிக்கா சென்ற போது இவரும் உடன் சென்றார். டப்ளனில் இவர்கள் தங்கியிருந்தனர். தென்னாப்பிரிக்காவில் நிலவிய இனவெறி கொடுமையை எதிர்த்து சத்தியாகிரக முறையில் போராடிய காந்திக்கு இவரும் உறுதுணையாக களத்தில் இருந்தார். பொதுவாழ்வில் பெண்கள் ஈடுபட ஏன் தயங்குகின்றனர் என்ற யோசித்து தம்பதிகள் இருவரும் கி.பி.1906 முதல் பிரம்மசார்யத்தை கடைப்பிடித்தனர். கி.பி.1913ல் நடந்த அறப்போராட்டத்தில் கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் சிறையில் இருந்தார். பெரும்பாலும் காந்திஜி சிறையில் இருக்கும் நேரங்களில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியது இவரே. சிறையில் சைவ உணவு உண்ணும் இவருக்கு பெரும்பாலும் அசைவ உணவுகளையே கொடுப்பார்கள். சைவ உணவு கேட்டால் அழகி கெட்டு போன்றவற்றை கொடுப்பார்கள். வெளியிலிருந்து உணவை  தருவியுங்கள் எங்கள் பணத்திலிருந்து தருகிறோம் என்றால் இது சிறைச்சாலை உங்கள் வீடு இல்லை என்று அவமானப்படுத்தி நகைப்பார்கள். இந்த சிறையில் தான் இவரது உடல்நிலை மேலும் மோசமாக ஆரம்பித்தது. 

கி.பி.1915ல் இந்தியா திரும்பியதும் இவர் பெரும்பாலும் சபர்மதி ஆசிரமத்திலையே தங்கி வசித்து வந்தார். சிறு வயதிலையே ஆஸ்துமா தொந்தரவுகள் இருந்தாலும் கணவரின் தேவைகளை கவனிப்பதிலும் விடுதலை போராட்ட களத்தில் இறங்கி போராடவும் சுணக்கம் காட்டியதேயில்லை. கி.பி.1917ல் பீஹாரில் சம்பரானில் உள்ள இண்டிகோ விவசாயிகளுக்காக காந்திஜி போராடி கொண்டு இருந்தபோது இவர் அங்கிருந்த பெண்களின் நலனில் அக்கறை காட்டினார். அவர்களுக்கு சுய தொழில் செய்ய ஊக்குவித்தார்.  கி.பி.1932ல் உப்பு சத்தியாகிரகத்தின் போது தண்டியில் உப்பு காய்ச்சிய பின்னர் மற்றொரு இடத்தில் உப்பு காய்ச்ச போவதாக அறிவித்த காந்தியை ஆங்கில அரசு கைது செய்தாலும் அவரிடத்தில் இவர் இருந்து போராட்டத்தை துவளாமல் தாங்கி பிடித்து வழிகாட்டினார். இவரின் தலைமையில் கீழ் எண்ணற்ற குடும்ப பெண்களும் கலந்துகொண்டு சிறை சென்றனர். பெண்கள் வீட்டிலையே இருந்தாலும் நாட்டு பணிக்காக இறங்கி போராட வேண்டும் என்று அவர்களை தயார்படுத்தினார். கி.பி.1939ல் ராஜ்கோட்டில் நடந்த அகிம்சை போராட்டத்தில் கைது செய்யப்பட்டு 1 மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.  கி.பி.1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காந்தியுடன் கைது செய்யப்பட்டு பூனேவில் உள்ள ஆகாகான் அரண்மனையில் வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளில் மிகவும் உடல்நலம் குன்றியது. மூச்சுக்குழாய் அழற்சி நோய் நீண்ட நாட்கள் வீட்டுசிறையில் வாடியதால் அதிகமானதுடன் நிமோனியா பாதிப்பும் ஏற்பட்டது. தொடர்ச்சியான மாரடைப்பினால் அவதிப்பட்டு கி.பி.1944 பிப்ரவரி 22ல் மரணமுற்றார். மகாத்மா காந்திக்கு ஒரு குடும்பத்தை கவனிக்கும் மனைவியாகவும் அவரை கவனித்து கொண்ட தாயாகவும் போராட்ட களத்தில் சக தோழியாகவும் நின்ற இவரின் மறைவு காந்திஜியை மிகவும் கலங்க அடித்தது. "ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்" என்ற கூற்றின்படி காந்திஜியின் போராட்ட வெற்றியின் பின்னால் கஸ்தூர்பா காந்தி நிற்கிறார். ஆனால் கஸ்தூர்பாவின் சேவைகளை கணக்கில் கொள்ளாமல் காந்தி‌ஜியின் மனைவி என்ற போர்வையில் மறைந்து போகிறார். உண்மையில் காந்திஜியின் உள்ளதுணிவுக்கு பின்புலமே கஸ்தூர்பா காந்தி தான்.

Comments

Popular posts from this blog

135) கங்கா தேவி

137) காளி பாய்

முன்னுரை