139) பெயர் தெரியாது (அர்ஜூன் சிங்கின் தியாகத்தாய்)

பெயர் தெரியவில்லை (அர்ஜூன் சிங் தாய்) :


இந்திய வரலாற்றில் எத்தனையோ பெண்கள் தங்களின் தியாகத்தினாலும் வீரத்தினாலும் நாட்டுபற்றினாலும் உயர்ந்து நிற்கின்றனர். அவர்களுள் ஒருவராக நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்த இன்றைய ஹரியானாவிலுள்ள அர்ஜூன் சிங் என்பவரின் தாய்.

நேதாஜி பர்மாவில் இருந்த சமயம் இந்திய தேசிய இராணுவத்திற்கு ஆள் எடுக்க அறிவிப்பு விடுத்தார். "சுதந்திரத்திற்கு விலையாக நம் இரத்தத்தை கொடுப்போம்" என்று ரேடியோவில் அறிவிப்பு கொடுத்தார்.ஆசாத் ஹிந்த் படைக்கு கேப்டன் தில்லான் என்பவரை நியமித்து இளைஞர்களை படைக்கு ஆள் எடுக்க சொன்னார். அப்போது தாய்க்கு ஒரே மகனாக இருந்தால் படைக்கு எடுக்க வேண்டாம் என்று உத்தரவு அனுப்பினார். அதன்படி ஆள் எடுத்துக்கொண்டு இருந்தனர். இந்த நேரத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வரிசையில் காத்திருந்தனர். அவர்களுள் ஒருவராக அர்ஜூன் சிங் என்பவரும் இருந்தார். அவரை கேப்டன் தில்லான் விசாரிக்கும்போது அவர் தந்தையை இழந்தவர். தாயின் ஒரே மகன் என்றும் மாடுகளை வைத்து பிழைப்பு நடத்துவதாக கூறவும் கேப்டன் தில்லான் அவரிடம் உன்னுடைய தேச பக்தி குறைவில்லாதது. ஆனால் நேதாஜியின் உத்தரவுபடி உன்னை படையில் எடுக்க முடியாது என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார்.

வருத்தத்துடன் வீட்டிற்கு வந்த மகனை ஏன் விரைவில் வந்துவிட்டாய் என்று கேட்க நடந்ததை கூற கவலைப்படாதே மகனே அடுத்த மூன்றாவது நாள் நீ படையில் இருப்பாய் என்று அவருக்கு உத்தரவாதம் கொடுத்தார். நானே உன் தேசத்திற்கு போராடுவதற்கு தடையாகி விட்டேனே என்று வருந்தினார். மூன்று நாட்கள் கழித்து மீண்டும் வரிசையில் நின்று அர்ஜூன் சிங்கை கவனித்த கேப்டன் தில்லான் அவரிடம் கோபப்பட்டு ஏன் திரும்ப வருகிறாய் என்று கேட்க என் தாய் நானே உன் நாட்டிற்காக போராட தடையாகி விட்டேனே என்று வருந்தியவர் அடுத்த நாள் கிணற்றில் விழுந்து தன்னை மாய்த்து கொண்டார் என்று கூறி தனக்கு என்று யாரும் இப்போது இல்லை கூற கேப்டன் தில்லான் அந்த தியாகத்தாயை நினைத்து கண் கலங்கினார். நேதாஜி வருகையின் போது அர்ஜூன் சிங்கை பற்றி கூறி அவரை சந்திக்க வைத்தார். நேதாஜி அவரிடம் நாம் கடைசியில் உயிர் போகும்வரை நம் போராட்டத்தை விடக்கூடாது என்று கூற என் துப்பாக்கியில் கடைசி குண்டு இருக்கும் வரை நான் களத்தில் முன் வரிசையில் நின்று போராடுவேன் என்று கூறினார். அர்ஜூன் சிங் போராட்ட களத்தில் மரணிக்க நேதாஜி அவரது இரங்கல் செய்தியில் "மரணத்தோடு விளையாடிய தாய் & மகனை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்" என்று கூறினார். தன் மகன் நாட்டிற்கு பணி செய்ய தானே தடையாக இருப்பதை உணர்ந்து தன்னுயிரை நீத்து மகனை தேச சேவைக்கு அனுப்பிய உத்தம தாய் இவர். இத்தகைய வீர தாய்களின் தியாகத்தாலும் நாட்டுப்பற்றினாலும் நாம் சுதந்திரம் பெற்றோம் என்பதை என்றும் மறக்காதிருப்போம்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்