16) சுவான் பாய் போன்ஸ்லே
சுஜான் பாய் போன்ஸ்லே : ஆட்சி : (கி.பி.1737-1738)
இரண்டாம் வெங்கோஜி (அ) ஏகாஜிக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த இவர் அவரின் மனைவியாவார். தஞ்சாவூர் அரியணையில் அமர்ந்த ஒரே மராத்திய அரசி. கணவரின் மரணத்திற்கு அரியணை ஏறினாலும் இவருக்கு பின்னால் சைய்யித் என்ற அமைச்சரே அரசை ஆட்சி புரிந்தார். இவருக்கும் முதலாம் சரபோஜியின் மகனான காட்டுராஜா (என்ற) இரண்டாம் சாஹூஜிக்கும் பிரச்சினை ஏற்படவே அவர் தஞ்சாவூரை விட்டு ஓடி பிரெஞ்சுகாரர்களின் உதவி பெற்று தஞ்சாவூர் மீது படையெடுத்தார். தஞ்சாவூர் அரண்மனையில் இருந்த போர்க்கோலம் புரிந்த சுஜான்பாய்யை வஞ்சகமாக அமைச்சர் சைய்யித்யினால் சிறை வைக்கப்பட்டார். அதன் பின்னர் காட்டுராஜா இரண்டாம் சாஹூஜி என்ற பெயரில் அரியணை ஏறினார். ஒரு வருடமே ஆட்சி புரிந்த இவர் தஞ்சையை ஆண்ட ஒரே மராத்திய பெண்மணி. வஞ்சகத்திலும் சூழ்ச்சியினாலும் போர் கோலத்தில் நின்ற இவரை சிறைப்பிடித்தனர். பெண்களாலும் போர்கோலம் போட முடியும் என்பதை நிரூபித்த ராணிகளுள் ஒருவர்.

Comments
Post a Comment