18) ஜீனத் மஹால்

ஜீனத் மஹால் (கி.பி.1823-1886) :


இந்திய பெண்மணிகளுள் ஆங்கிலேயரை விரட்ட முனைந்த மொகலாய பேரரசின் கடைசி அரசர் பகதூர் ஷா ஃஸாபரின் ஆசை மனைவி. கடைசி மொகலாய இளவரசி. இவர் கி.பி.1823ல் பிறந்தார். இவர் தனது 17வது வயதில் கி.பி.1840ல் மொகலாய அரசர் இரண்டாம் பகதூர் ஷா ஃஸாபரை மணந்தார். இவருக்கு மிர்ஸா ஜவான் பக்த் என்ற மகன் உண்டு. பகதூர்ஷாவின் இன்னொரு மகனான இளவரசனாக அறிவிக்கப்பட்டு இருந்த மிர்ஸா தாரா பக்த் கி.பி.1849ல் மறைந்தவுடன் பகதூர் ஷாவிடம் அதிக உரிமையை எடுத்து தனது மகனான மிர்ஸா ஜவான் பக்த்தை அடுத்த இளவரசராக அறிவிக்க வைத்தார். பகதூர் ஷாவுக்கு வேறு வயதில் மூத்த மகன்கள் இருந்தாலும் இளையவரான தனது மகனை இளவரசராக்கினார். ஆனால் பிரிட்டிஷார் இந்த நடைமுறையை ஆதரிக்கவில்லை‌. மூத்த மகனுக்கு பட்டம் என்பது கூறிவிட்டதால் டெல்லியின் பிரிட்டிஷ் ரெஸிடென்ட்டான தாமஸ் மெட்கால்ஃப்க்கு கி.பி.1853ல் விஷமிட்டு கொன்றதாகவும் சந்தேகங்கள் உண்டு. 

கி.பி. 1857ல் சிப்பாய் புரட்சியின் போது புரட்சியாளர்கள் டெல்லிக்கு வந்தவுடன் அவர்களுடன் தன் மகனான மிர்ஸா ஜவான் பக்த்தை தொடர்பு கொள்ள வைத்து மீண்டும் அரியணையை தன் மகனுக்கு கைப்பற்றும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். ஆனாலும் புரட்சியாளர்கள் இவரை நம்பாமல் இவர் டபுள் ஏஜென்ட்டாக இருப்பாரோ என்ற சந்தேகத்திலையே இருந்தனர். புரட்சி தோல்வியடைந்தவுடன் தன் கணவர் மற்றும் மற்ற இளவரசர்களுடன் டெல்லியிலுள்ள "ஹூமாயூன் கல்லறை" வளாகத்தில் ஒளிந்து கொண்டார். ஆங்கிலேய அரசு பேச்சுவார்த்தைக்கு பின்னர் இவரையும் பகதூர் ஷா மற்றும் மற்ற இளவரசர்களையும் சரணடைய வைத்தது. பட்டத்திற்குரிய இளவரசர்கள் அரண்மணையின் வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டனர். இதனால் இந்த வாசல் "கொலை வாசல் (Khooni Dharwaza)" என்று அழைக்கப்படுகிறது. பின்னர் விசாரணைக்கு பின்னர் பகதூர் ஷா , அவரின் மனைவியான இவர் (ஜீனத் மஹால்) மற்றும் மகனான இளவரசர் மிர்ஸா ஜவான் பக்த் மற்றும் இன்னும் சில மைனர் இளவரசர்களை பர்மாவிலுள்ள ரங்கூன் சிறைக்கு பிரிட்டிஷ் அரசு நாடு கடத்தியது. இந்த நிகழ்வுடன் மொகலாய பேரரசு இந்தியாவில் முடிவுற்றது. இவரது கணவரான இரண்டாம் பகதூர் ஷா ஃஸபார் கி.பி.1862ல் மறைந்தார். இவரும் கி.பி.1876ல் ரங்கூன் சிறையிலையே மறைந்தார். இவர் இவரது கணவரின் அருகில் ரங்கூனில் உள்ள ஜூம்மா மசூதியில் அடக்கம் செய்யப்பட்டார். இன்று அந்த தர்கா பகதூர் ஷா ஃஸபார் தர்கா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கடைசி காலத்தில் இவரும் இவர் கணவரான பகதூர் ஷாவும் மட்டுமே கேமராவினால் புகைப்படம் எடுக்கப்பட்ட மொகலாய அரசர் மற்றும் அரசி என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்