24) கேலடி சென்னம்மா

கேலடி சென்னம்மா :



நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் ஒரு சில ராணிகள் ஆண்டு வந்திருக்கின்றனர். அவர்களுள் முக்கியமானவர் இன்றைய கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த கேலடி ராஜ்ஜியத்தை ஆண்ட ராணி சென்னம்மா என்றால் மிகையாகாது.  இவர் குண்டப்பூர் பகுதியை சேர்ந்த வியாபாரியான சித்தப்பா என்ற லிங்காயத் மரபை சேர்ந்தவருக்கு மகளாக பிறந்தார். இளமையிலையே குதிரையேற்றம் மற்றும் வாட்பயிற்சிகளை கற்றுக்கொண்டார். தனது 15 வயதில் கி.பி.1667ல் கேலடியை ஆண்ட கேலடி நாயக்கர் வம்சத்தை சேர்ந்த சோமசேகர நாயக்கரை மணந்தார். தனது கணவர் கி.பி.1677ல் மறைந்தவுடன் இவர் அரசு ஏற்றுக்கொண்டார். தனது கணவரின் உறவினரில் பசப்பா என்பவரை தத்தெடுத்தார். இவருக்கு பின்னால் அரியணை ஏறிய ஹிரயா பசப்பா நாயக்கர் என்பவரே அவர். இவர் போர்த்துகீசியர்களுடன் அரிசி மிளகு முதலிய பொருட்களுடனான வர்த்தகத்தில் ஈடுபட்டார். அதனால் இன்றைய தேவனகிரி மாவட்டத்தில் உள்ள ஊருக்கு இவர் பெயரை கொண்டு சென்னகிரி என்ற பெயரே நிலைத்தது. போர்த்துகீசியர்களை நாட்டின் பல பகுதிகளில் தேவாலயங்கள் கட்டவும் அனுமதி கொடுத்தார். 


கி.பி.1689ல் மராத்திய அரியணையில் அமர்ந்த சிவாஜியின் மகனான சத்ரபதி ராஜாராம் மீது ஒளரங்கசீப் பெரும்படை பலத்துடன் மோதினார். இதனால் ராஜாராம் அடைக்கலம் தேடி கேலடி சென்னம்மாவிடம் வந்தார். ராஜாராமிற்கு சகல மரியாதைகளுடன் அடைக்கலம் கொடுக்க ஒளரங்கசீப் அவரை தன்னிடம் ஒப்படைக்க கோரினார். அடைக்கலம் கோரியவர்களுக்கு உயிரை கொடுத்து தான் பழக்கமே தவிர அவர்களை நிராதரவாக விட்டுவிடுவது பழக்கமில்லை என்று ஒளரங்கசீப்பின் பெரும்படையுடன் மோதினார். இந்த இடைப்பட்ட நேரத்தில் கேலடியின் துணை ராஜ்ஜியத்தை சேர்ந்த சதாசிவா என்பவர் ராஜாராமிற்கு பெரும்பணம் கொடுத்து உதவி தமிழ்நாட்டின் செஞ்சி கோட்டைக்கு தப்பிக்க உதவினார். பெரும்படையை வைத்திருந்த ஒளரங்கசீப்பால் கூட சென்னம்மாவின் வீரமான சிறுபடையை வெற்றி கொள்ள முடியவில்லை. போரின் முடிவில் எந்த தரப்புக்கும் வெற்றியின்றி அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. ஒளரங்கசீப்பை எதிர்த்து சிறுபடையுடன் மோதி தோல்வியை தழுவாமல் ஏன் தான் இவரிடம் மோதினோமோ என்று அவரை கவலைப்படுத்தும் அளவுக்கு போர்களத்தில் வீரத்தை வெளிப்படுத்தினார் கேலடி சென்னம்மா என்ற இந்த வீர அரசி.‌  26 ஆண்டுகள் கேலடியை ஆண்ட‌இவர் கி‌.பி.1703ல் மறைந்தார். இவரை பற்றி கேலடி சென்னம்மா என்ற தொலைக்காட்சி தொடர் கன்னட மொழியில் வெளியாயிற்று.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்