25) கிரண் தேவி ரதோர்
கிரண் தேவி ரதோர் :
இராஜபுதன ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் வீரமிக்கவர்களாகவே இருந்தனர். அதுவும் ஆளானப்பட்ட மொகலாய பேரரசர் அக்பரின் அரண்மனையில் தன்னை நெருங்கிய அக்பரின் கழுத்தில் கத்தியை வைத்து அரண்மனையை விட்டு அகன்றவர் தான் இந்த வீரப்பெண்மணி கிரண் தேவி ரதோர். இந்திய சரித்திரம் கண்ட வீராங்கனைகளில் இவரும் ஒருவர்.
ஒவ்வொரு புத்தாண்டின் முதல் ஒன்பது நாட்கள்) அரண்மனையில் பெண்களுக்காக பெண்களே விற்பனையாளர்களாக வாடிக்கையாளர்களாக நடத்தும் விழா அது. அரண்மணை பெண்கள் வெளியே சென்று பொருட்களை வாங்க முடியாது என்பதால் ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு முதல் ஒன்பது நாட்கள் நடந்ததால் நவ்ரோஸா என்றழைக்கப்பட்டது. இது எனக்கு குஷ்ரோஸா என்று அக்பரே கூறுவார். இந்த நிகழ்வுகளில் தனக்கு பிடித்தமான பெண்ணை தேர்ந்தெடுத்து மனைவியாக்கி கொள்வார். அக்பருக்கு பிடித்தமான பெண்களை பணிப்பெண்கள் வழிகாட்டுவது போல தவறாக வழிநடத்தி முடிவில் அக்பரின் அறைக்கு கொண்டு விட்டு விடுவார்கள். மேவாரின் ராணா பிரதாப் சிங்கின் சகோதரரான சக்தி சிங் அண்ணனுடன் ஏற்பட்ட அரியணை தகராறால் அக்பரிடம் வந்து அவரின் அரசவையில் இருந்தார். அவரது மகளான கிரண் தேவி ரதோர் என்பவர் பிகானீயர் இளவரசரன பிரித்விராஜ் ரத்தோர் என்பவரை மணந்தார். கிரண் தேவிக்கு மொகலாயர்களை பிடிக்கவில்லை என்றாலும் கணவர் அவரது அவையில் இருந்ததால் வேறு வழியில்லாமல் டெல்லியில் வாழ்ந்து வந்தார். மொகலாயர்களை கடுகளவும் மதிக்காமல் இராஜபுதனத்தின் சுதந்திர தாகத்தை ஊட்டி வளர்க்கும் தன் பெரியப்பாவான ராணா பிரதாப் சிங்கின் மீது அளவற்ற மரியாதை கொண்டிருந்தார். ஒரு புத்தாண்டின் நவ்ரோஸாவின் போது இவருக்கு அவரது கணவரான பிரித்விராஜ் மூலம் அழைப்பு அனுப்பினார். கடைவீதியில் இவரை கண்ட அக்பர் இவரின் அழகில் மதிமயங்கினார். பணிப்பெண்களிடம் அடையாளம் காட்ட அவர்கள் இவரை தவறாக வழிநடத்தி அக்பரின் அறைக்கு கொண்டு வந்துவிட்டனர். அக்பர் இவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி வசப்படுத்த முயல இவர் அக்பரின் கழுத்தில் கத்தியை வைத்து "நான் இராஜபுத்ர பெண். உயிரை பற்றி கவலைப்பட மாட்டேன். என்னை நெருங்கினால் இந்துஸ்தானம் அதன் சக்கரவர்த்தியை இழக்க நேரிடும்" என்று கூறி அக்பரிடம் இருந்து தப்பித்து சென்றார். பின்னர் வீட்டிற்கு சென்றவுடன் இனிமேல் டெல்லியில் இருந்தால் வீணான தொல்லைகள் ஏற்படும் என்பதால் கணவரும் மனைவியுமாக டெல்லியை விட்டு உடனே அகன்று பிகானீயர் சென்று விட்டனர். இது சரித்திரத்தில் மறைக்கப்பட்ட பக்கங்களுள் ஒன்றாக உள்ளது. அன்றைய காலத்தில் உலகத்தின் சக்திவாய்ந்த அரசர்களுள் ஒருவரும் உலகத்தின் சொத்து மதிப்பில் 1/3 பங்கிற்கு மேல் கொண்ட அக்பரை ஒரு சிறுபெண் தன் துணிச்சலால் அவரிடமிருந்து தப்பித்து சென்றார். இவரது தந்தையான சக்தி சிங் தனது அண்ணனான ராணா பிரதாப் சிங்கை ஹல்திகாட் போரில் அவரின் உயிரை காப்பாற்றினார். இதன் பின்னரே அண்ணனுடன் தம்பிக்கு பூசல்கள் மறைந்தது. மானமே பிரதானம் அதை விட உயிர் பெரிதல்ல என்று துணிச்சலுடன் செயல்பட்ட வீரப்பெண்ணான கிரண் தேவி ரதோர் துணிச்சலான வீரப்பெண்மணிகளுள் ஒருவராக இன்றும் இராஜபுத்ரர்களால் நினைவு கூறப்படுகிறார்.

Comments
Post a Comment