3) மீரா பாய்


மீரா என்றாலே எல்லாருக்கும் கண்ணன் என்று தான் உடனே ஞாபகத்தில் வரும். இந்த மீராபாய் இராஜஸ்தானின் ஜோத்பூர் அரசரின் மகளாக இளவரசியாக வளர்ந்து சித்தூர் கார்க் இளவரசரின் மனைவியாய்  இருந்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்னு தெரியலை? ஆனால் மீரா என்றாலே கண்ணனை பற்றிய பஜன் பாடல்கள் என்று தான் ஞாபகத்தில் வரும். கண்ணனின் மீது கொண்ட அப்பழுக்கற்ற பக்தி தான் நினைவுக்கு வரும்.

மீரா பாய் இன்றைய இராஜஸ்தானிலுள்ள ஜோத்பூர் அரசை ஸ்தாபித்த ராவ் ஜோதாவின் பேரனான ரத்தன் சிங் மற்றும் வீர குமாரி தம்பதிகளின் மகளாக ஓரு வைஷ்ணவ குடும்பத்தில் கி.பி.1498ல் ஜோத்பூர் அருகே குட்கி என்னுமிடத்தில் பிறந்தார். அவருக்கு 7 வயதாக இருக்கும்போதே அவரது அம்மா இறந்துவிட்டதால் தாத்தாவான ராவ்தூத்யினால் வளர்க்கப்பட்டு கல்வியும் பயின்றார். சிறுவயது முதலே "கிரிதரகோபாலன்"என்ற கிருஷ்ணனின் சிலை மீது கொண்ட் ஈடுபாடு காரணமாக அவரையே தன் கணவனாக வரித்துக் கொண்டார். குடும்பத்தினரின் வற்புறுத்தல்கள் காரணமாக கி.பி.1516ல்  சித்தூர்க்கார்க் இளவரசனான "போஜராஜ் சிஸ்டோடியா"வை மணந்துகொண்டார்.

போஜராஜனின் குடும்பத்தில் பவானி மற்றும் துர்க்கை வழிபாட்டை மேற்கொண்டிருந்தனர். இவர் அந்த வழிபாட்டை மேற்கொள்ளாமல் கிருஷ்ண வழிபாட்டை மட்டுமே மேற்கொண்டதால் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நேரத்தில் கி.பி.1521 ல் டெல்லி சுல்தானுக்கு எதிரான எல்லா இராஜபுத்திர அரசர்களின் கூட்டணி படையில் போரிட்ட போஜராஜன் போரில் மாண்டு போக மாமனாருககும் பலத்த காயம். கணவனை இழந்தபின் அவரது மாமனாரே (இராஜபுத்திரர்களில் மாவீரன் என்று போற்றப்படும் ராணா சங்கா என்பவரே மீராவின் மாமனார்) அவருக்கு தந்தையின் ஸ்தானத்தில் அவருக்கு முழுபக்க பலமாக இருந்தார். அவரும் இறந்து போகவே சித்தூர்க்கார்க் அரண்மனையில் கண்ணனுக்கு கட்டிய கோவிலிலையே வாழ்ந்து வந்தார்.

மாமனாருக்கு பின் ஆட்சிக்கு வந்த அவரின் மகனான இரண்டாம் ரத்தன் சிங்க்கு பிறகு அவரின் இன்னொரு தம்பியும் மீராவின் இறந்துபோன கணவரின் தம்பியான விக்ரமாதித்யா சிங் இவரின் கண்ணவழிபாட்டுக்கு எதிர்ப்பாகவே இருந்தார். அரண்மனைக்குள் மட்டுமே கண்ணனை வழிபட்டு வந்த மீரா பாய் பின்னர் அரண்மனையை விட்டு சாதுக்களோடும் சாமான்ய மக்களுடன் தன்னை மறந்து கிருஷ்ணனின் பஜன் பாடல்களை பாடுவது அரச குடும்பத்திற்கு நல்லதல்ல என்று அவரை தீர்த்துக்கட்ட அவரின் சகோதரி உதாபாய் உதவியுடன் பலமுறை முயன்றார். 

கண்ணனுக்கு படைத்த நெய்வோத்தியத்தில் நஞ்சை கலந்து மீராவை உண்ணசெய்தனர். ஆனாலும் கண்ணனின் அருளால் நஞ்சு அவரை பாதிக்கவில்லை. பின்னர் மீராவின் படுக்கையில் இரும்பினாலான முட்களை கட்டிலில் வைத்தனர். அதுவும் அவருக்கு கண்ணனின் அருளால் எதுவும் ஆகவில்லை. கொடிய விஷமுடைய பாம்பை கூடையில் அடைத்து கண்ணனுக்கு அர்ப்பணிக்க சொல்ல அதுவும் கண்ணணுக்கு மாலையாகவே மாறியயது. பின்னர் இவர் குரு ரவிதாசரின் வழியை பின்பற்றி சித்தூர்க்கார்க் அரண்மனையை விட்டு தப்பித்து வந்து கண்ணன் பிறந்த பிருந்தாவனத்தை அடைந்தார்.


இதன்பின்னர் வட இந்தியா முழுவதும் யாத்திரை செய்து கண்ணனின் புகழ் பஜன்களாக பாடினார். இவர் 1300 பஜன் பாடல்களை இயற்றியுள்ளார். பிறப்பு இறப்பு இன்றி பேரின்ப நிலையை அடைய கண்ணனை பின்பற்றுவதே வழி என்று பாமர மக்களுக்கு பக்தியை பாடல்களின் வழியே பரப்பினார். தன் இறுதிக்காலத்தில் இன்றைய குஜராத்தின் துவாரகா நகருக்கு வந்தார். அங்கு கோயில்கொண்டுள்ள துவாரகதீசன்(கண்ணன்) முன்பு பாடிக்கொண்டே எல்லார் கண்ணெதிரிலையே மாயமாக மறைந்து கண்ணனுடன் ஒன்று சேர்ந்தார். இவர் கண்ணணுடன் கலந்தது கி.பி.1568 மார்ச் 2ம் தேதி என்று சொல்லுகிறார்கள். சிலர் கி.பி.1547 என்று சொல்லுகிறார்கள். எது எப்படியோ அவர் கண்ணனுக்குள் முக்தியடைந்தது நிஜம். இவரின் பாடல்கள் 150 வருடங்கள் கழித்தே கிடைத்தது.


உதவிய நூல்கள்:

எனது இந்தியா - எஸ்.ராமகிருஷ்ணன்

விக்கிபீடியா தகவல்கள்

பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்