31) மஸ்தானி

மஸ்தானி  (கி.பி.1699-1740) :

இவர் பண்டல்கண்ட்டின் இராஜபுத்ர மன்னரான சத்ராசல் மற்றும் அவரது பணிப்பெண்ணாக இருந்து மனைவியான முஸ்லீம் பெண்ணான ருஹானி பாய்க்கும் பிறந்த மகள். பண்டல்கண்ட்டில் சத்ராசல் மன்னர் மொகலாயர்களுக்கு எதிராக தனி ராஜ்யம் நடத்தினார். கி.பி.1728 டிசம்பரில் மொகலாயப் படைகள் அவரை தாக்க அவர் மராத்திய பேஷ்வா பாஜிராவ்வின் உதவியை நாடினார். கி.பி.1729 மார்ச்சில் 25000 வீரர்களை அனுப்பி மொகலாயப் படைகளை தோற்கடித்து சத்ராசலை திரும்பவும் பண்டல்கண்ட்டில் மன்னராக்கினார். நடனமாடும் திறமை படைத்த மஸ்தானி பாஜிராவிற்கு அளித்த விருந்தில் நடனமாடியதை கண்டு பாஜிராவ் இவரின் அழகில் மயங்கி காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகத்தான ஒரு காதல் காவியம் ஆரம்பமாகியது. சத்ராஸல் பாஜிராவ்விற்கு ஜாகிர்களையும் வெகுமதிகளையும் வழங்கி தன் மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். தொடர்ச்சியான படையெடுப்புகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக பாஜிராவ் உடல்நலம் குறைந்தார். ராவர்கேடி என்னுமிடத்தில் இராணுவ முகாம் முகாமிட்டு இருந்த சமயத்தில் இதய பக்கவாதத்தால் கி.பி.1740 ஏப்ரல் 28ல் மறைந்தார். 


பாஜி ராவ் - மஸ்தானி தம்பதிகளுக்கு  ஷாம்ஷெர் பகதூர் என்ற மகன் கி.பி.1834ல் பிறந்தார். இவர் முஸ்லிம் பெண்ணுக்கு பிறந்தவர் என்பதால்  மஸ்தானியின் மகனான ஷாம்ஷேர் பகதூருக்கு உபநாயன சடங்குகள் செய்ய பாஜிராவ்வின் தாயாரான ராதா பாய் மறுத்தார். மஸ்தானி முஸ்லீம் இனத்தவர் என்பதால் பிராமணருக்குரிய சடங்குகளை செய்ய பாஜி ராவ் முயன்றாலும் பாஜி ராவ்வின் தாயார் அவ்வாறு நடத்த மறுத்துவிட்டதால் பாஜி ராவ் மனமுடைந்து போனார். பாஜி ராவ்வின் தாயார் ராதா பாய் "பாஜி ராவ் குடியை நிறுத்தினால் தான் வீட்டுக்காவலில் இருக்கும் மஸ்தானியை அனுப்பமுடியும்" என்று கூற பாஜி ராவ் மிகுந்த வேதனையடைந்தார். கி.பி.1840ல் பாஜி ராவ் நோயினால் இறந்த குறைந்த காலத்தில் இவரும் மறைந்தார். சிலர் இவரை பாஜிராவ்வின் குடும்பத்தினர் விஷமிட்டு கொன்றனர் என்றும் சிலர் பாஜிராவ்வின் மரணத்தின் அதிர்ச்சியினால் இவர் மறைந்தார் என்றும் பாஜி ராவ்வின் இறுதி சடங்கில் விஷமருந்தி மரணமடைந்தார் என்றும் இறுதிச்சடங்கில் இவரும் சிதையில் விழுந்து அவருடன் உடன்கட்டை ஏறினார் என்றும் கூறுகின்றனர். ஆனால் சிலர் பாஜிராவ்விற்கு முன்பே இவர் மரணமடைந்து விட்டார் என்றும் இவரது மறைவை பாஜிராவ் குடும்பத்தினர் மறைத்தனர். பின்னர் விவரம் தெரிந்த பாஜி ராவ் அந்த வேதனையிலையே மறைந்தார் என்றும் கூறுகின்றனர். 

மஸ்தானியின் மரணத்தின்போது 6 வயது சிறுவனான அவரது மகனான ஷாம்ஷேர் பகதூரை பாஜிராவ்வின் மூத்த மனைவியான காசிபாய் தன் மகனை போல வளர்த்து அவருக்குரிய சொத்துகளை கொடுத்தார். இந்த மகன் கி.பி.1761ல் மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்களுக்கு ஆதரவாக போரிட்டு காயம்பட்டு சில நாட்களில் மறைந்தார். பாஜி ராவ்-மஸ்தானி காதல் கதையை பற்றி கி.பி.1925ல் பேசாபடம் ஒன்று எடுக்கப்பட்டது. அது முதல் தற்போது வரை நிறைய படங்களும் டிவி சீரியல்களும் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல இந்தி பட டைரக்டர் சஞ்சய் லீலாபன்சாலி அவர்களால் கி.பி‌.2015ல் ரன்வீர் சிங் நடிப்பில் பாஜிராவ் மஸ்தானி என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்