34) அலமேலு மங்கம்மாள்


அலமேலு மங்கம்மா ( ???? - கி.பி.1612) :


சரித்திரத்தில் எத்தனையோ பெண்கள் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் இவர் நிரம்ப வித்தியாசமானவர். ரங்கநாதசுவாமியின் மீது அளவு கடந்த பக்தியினால் தன்னை துன்புறுத்திய ராஜ குடும்பத்துக்கு கொடுத்த சாபம் இன்னும் 400 ஆண்டுகளாக தொடர்ந்து வருவது என்றால் அலுமேலு அம்மாவின் பக்தியினால் தான் இருக்கும் என்றும் இன்றும் மக்களும் மைசூர் ராஜ வம்சமும் நம்புகிறார்கள். அலுமேலு மங்கா ஶ்ரீரங்கப்பட்டிணத்தின் பொறுப்பாக உள்ள விஜயநகரத்து சாம்ராஜ்ய அரசரால் நியமிக்கப்பட்டவர். அவருக்கு இரண்டு மனைவிகள். அதில் இந்த இரண்டாவது மனைவி தான் அலுமேலு மங்கா.


கி.பி.1596ல் ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் தசரா திருவிழாவின் போது இரண்டாம் திருமலைராயருக்கும் இவருக்கும் மோதல் வரவே அவர் மைசூரின் மீது படையெடுக்க இவரும் இவரது சகோதரர் தேவராஜ உடையாரும் போரில் இறங்கி விஜயநகரத்து படைகளை விரட்டியடித்தனர். இதன்பின் விஜயநகரத்து அரசரான இரண்டாம் வேங்கடா ராயர் ராஜ் உடையாருடன் நட்பு பாராட்டினார். அவரின் தளபதியை நரசிபுரம் மன்னர் சிறைவைக்கவே ராஜ் உடையார் அவரை மீட்டுக் கொடுத்தார். இதனால் இரண்டாம் வேங்கடா ராயர் ராஜ உடையார் வசம் ஸ்ரீரங்கப்பட்டினத்தை கொடுத்ததாகவும் கி.பி.1610ல் ராஜ் உடையாரின் மகனான நரசராஜ உடையார் படையுடன் திருமலைராயரை தோற்கடித்து விரட்டி ஸ்ரீரங்கப்பட்டினத்தை கைப்பற்றியதாகவும் இரு செய்திகள் உள்ளது. இதன் பின் திருமலை ராயர் அவரது இரு மனைவிகளான அலமேலு அம்மாள் மற்றும் ரங்கம்மாள் உடன் தலைக்காடு அருகில் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.இவரது காலத்தில் கி.பி.1610லிருந்து மைசூரில் தசரா திருவிழா விமர்சையாக யானைகள் பவனி நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் நடக்க ஆரம்பித்தது. 


அலுமேலு அம்மாவின் தலைக்காடு சாபம் சம்பவம் கி.பி.1612ல் மைசூரின் முதலாம் ராஜ உடையாரின் ஆட்சியில் தான் நடந்தது. திருமலை ராயரின் மனைவியான அலமேலு அம்மாவின் பொறுப்பில் தான் ஸ்ரீரங்கப்பட்டினத்திலுள்ள ரங்கநாதசுவாமி ஆலயத்திலுள்ள ரங்கநாயகி அம்மனின் நகைகள் பொறுப்பில் இருந்தது. அதை அவர் தன் பரம்பரை நகைகள் என்று எடுத்துக்கொண்டு சென்று விடவே ராஜ உடையாரின் படைகள் அதை பெற்றுக்கொள்ள முயல அவர் தப்பித்து ஓடி தலைக்காட்டில் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிடுவதற்கு முன்னர் " தலகாடு மறலி, மாலங்கி மடுவாகலி, மைசூரு டோரிகலி மக்கலடி ஹோகாலி - தலக்காடு மணலாய் மாறட்டும். மலிங்கி சுழலாய் மாறட்டும். மைசூர் மஹாராஜாக்களுக்கு ஆண் வாரிசே இல்லாமல் போகட்டும்" என்ற சாபம் கொடுத்து நகைகளுடன் ஆற்றில் மூழ்கி இறக்க ராஜ உடையார் பத்தினியின் சாபத்திற்கு ஆளாகி விட்டோமே என்று வருந்தினார். அலமேலு அம்மாள் மறைந்த பத்து நாட்களில் தலைக்காட்டில் மணல் மழை பொழிந்து வைத்தீஸ்வரன் கோயில் உட்பட பல கோயில்கள் மண்ணில் புதைந்து போயின. காவிரி ஆறு தன் பாதை மாறி மலிங்கிக்குள் புகுந்தது. இதனால் ராஜ உடையார் வெண்கலத்திலான அலமேலு அம்மாள் சிலை வடித்து தசராவின் 9வது நாள் அவருக்கு இன்று வரை வழிபாடு செய்கின்றனர். அலமேலு அம்மாவின் சாபத்தினால் பின்னால் ராஜ உடையாரின் நேரிடை வாரிசுகளுக்கு அல்பாயுசே கிடைத்தது. அதன்பின் நேரிடை வாரிசு அரியணை ஏறுவது அரிதாயிற்று. அப்படி ஏறியவர்களும் அல்பாயுளில் மறைந்தனர். சிலருக்கு மஹாராணிக்கு ஆண் வாரிசு இல்லாமல் ஆசை நாயகிகளுக்கு பிறந்தது. இதனால் அலமேலு சாபத்தின் காரணமாக இவ்வாறு நடப்பதாக நினைக்கிறார்கள். கி.பி. 14ம் நூற்றாண்டில் விஜயநகரத்து பேரரசின் மாதவ மந்திரி காவிரியின் அணை கட்டியதே இந்த பாதை மாற்றத்திற்கு காரணம் என்றும் பருவக் காற்றினால் தான் தலைக்காட்டில் மணல் சேருகிறது என்றும் காவிரி ஆறு பாதை மாறியதால் தான் மலிங்கியினுள் நீர் புகுந்து அதன் பெரும்பாலான பகுதிகள் சதுப்பு நிலமாக மாறிவிட்டதாகவும் புவியிலாளர்கள் கூறுகின்றனர்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்