35) இராஜகுமாரி அம்ரூத் கவுர்
இராஜகுமாரி அம்ருத் கவுர் (கி.பி.1889-1964) :
இராஜ்யத்தின் இளவரசிகள் பொது சேவைக்கு வருவது மிகவும் அபூர்வம். அப்படி வந்தவர்களில் ஒருவர் தான் அம்ரூத் கெளர். இவர் கி.பி.1889 பிப்ரவரி 2ம் தேதி உத்திரப்பிரதேசத்தில் லக்னோ நகரில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் கபுர்தலா ராஜ்ஜியத்தின் அரசரின் இளைய மகனான ராஜா சர் ஹர்னாம் சிங் மற்றும் அவரது மனைவியான பிரிசில்லா கோலக்நாத் (ராணி லேடி ஹர்னம் சிங்) ஆகியோர். இவரது தந்தையின் மூத்த சகோதரரின் மரணத்திற்கு பின்னர் இவரின் தந்தை அடுத்தடுத்த நடந்த அரியணை போராட்டத்தினால் கபுர்தாலாவை விட்டு வெளியேறினார். இவரது தாய் ஒரு பெங்காலி கிறிஸ்தவர் என்பதால் இவரது தந்தை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டார். அதனால் இராஜகுமாரி ஒரு ஆங்கிலிகன் கிறிஸ்தவர் சூழலில் வளர்க்கப்பட்டார். இங்கிலாந்தில் தனது ஆரம்ப கல்வியை கற்றார். பின்னர் அங்கேயே ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் கல்லூரி படிப்பையும் கற்று இந்தியா திரும்பினார்.
இந்தியா இந்தியா வந்தவுடன் இவருக்கு இந்திய சுதந்திர இயக்கத்தில் ஆர்வம் ஏற்பட்டது. கோபால கிருஷ்ண கோகலே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் இவரது தந்தை நெருங்கிய தொடர்பை பகிரவும் கி.பி.1919ல் மும்பையில் மகாத்மா காந்தியை சந்தித்த பின்னர் அவரது சிந்தனைகளால் காங்கிரஸில் சேரும் ஆர்வம் அதிகரித்தது. பின்னர் தொடர்ந்து ஏற்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தால் ஆங்கில அரசை கடுமையாக விமர்சித்த இவர் முறைப்படி காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து இந்திய தேசிய சுதந்திர போராட்ட களத்தில் தீவிரமாக பங்கேற்க தொடங்கினார். சமூக சீர்திருத்தங்களிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
இராஜகுமாரி அம்ரூத் கெளவுர் கி.பி. 1927 அகில இந்திய மகளிர் மாநாட்டை நிறுவினார். பின்னர் கி.பி.1930ல் இதன் செயலாளராகவும் கி.பி.1933ல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கி.பி.1930ல் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்ற நிகழ்வுக்காக சிறையில் அடைக்கப்பட்டார். இவர் பிரபுக்கள் பரம்பரையில் இருந்து வந்தாலும் கி.பி.1934ல் காந்தியின் ஆஸ்ரமத்தில் இணைந்து வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தார். கி.பி.1937ல் இந்திய தேசிய காங்கிரஸின் பிரதிநிதியாக கைபர்-பக்துன்வாவிற்கு நல்லெண்ண தூதுவராக சென்ற காரணத்தால் தேச துரோக குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் பிரிட்டிஷார் இவரை சிறையிலிருந்து விடுவித்தவுடன் ஆலோசனை குழுவின் உறுப்பினராக நியமித்தனர். கி.பி.1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட காந்தியின் அறிவிப்பால் அந்த பதவியை இராஜினாமா செய்து தீவிரமாக இயக்கம் ஆரம்பித்த வேளையில் அனைத்து காங்கிரஸ் தலைவர்களையும் பிரிட்டிஷார் கைது செய்தனர். இவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர் டெல்லியிலுள்ள லேடி இர்வின் கல்லூரியின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். சிறையில் இருந்த வெளிவந்ததும் 1945-46 ஆண்டுகளில் இலண்டன் மற்றும் பாரீஸில் யூனெஸ்கோ நாடுகளின் தூதுக்குழுவின் உறுப்பினராக இருந்தார். குழந்தை திருமணங்கள் மற்றும் பெண்களின் பர்தா ஒழிப்புக்காகவும் குரல் எழுப்பினார். இந்திய சுதந்திரம் அடைந்தவுடன் அரசியலமைப்பு உருவாக்கும் குழுக்களில் இணைந்தார். சிறுபான்மையினர் குழு மற்றும் அடிப்படை உரிமைகள் குழுக்களின் உறுப்பினராக இருந்தார். ஜவஹர்லால் நேருவின் தலைமையில் இருந்த மத்திய அமைச்சரவையில் இருந்த ஒரே பெண் உறுப்பினர் இவர் மட்டுமே. இவருக்கு சுகாதார துறை இலாகா ஒதுக்கப்பட்டது. கி.பி.1950ல் உலக சுகாதார துறையின் முதல் மற்றும் முதல் ஆசிய பெண் தலைவர் என்ற பெருமையை பெற்றார். இவர் புதுடெல்லியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தை ஆரம்பித்து வைத்து அதன் தலைவராக இருந்தார். இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றினார். கி.பி.1957 முதல் 1964 வரை மாநிலங்கள் அவையின் உறுப்பினராக இருந்தார். அது மட்டுமல்லாது அகில இந்திய போக்குவரத்து காங்கிரஸின் தலைவராகவும் இருந்தார். இவர் பார்ப்பதற்கு இந்திரா காந்தி போன்ற தோற்றமுடையவராக இருந்தார். கி.பி.1964 பிப்ரவரி 6ல் புதுடெல்லியில் மரணமடைந்தார். அரச குடும்பத்தில் இளவரசியாக பிறந்தாலும் சாமானிய மக்களின் நலன் சுகாதாரம் ஆகியவற்றிற்காக பாடுபட்டவர் இவர்.

Comments
Post a Comment