44) சுசேதா கிருபளானி

சுசேதா கிருபளானி (கி.பி.1908-1974) :


இந்தியாவில் முதல் பெண் மாநில முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றவர் இவர். காங்கிரஸ் அமைப்பில் காந்தியின் பின்னே கலவரமான நேரங்களில் தைரியமாக நவகாளிக்கு சென்று அமைதிப்பணியில் ஈடுபட்டவர்.

இவர் கி.பி.1908 ஜூன் 25ல் இன்றைய ஹரியானா மாவடட்த்திலுள்ள அம்பாலாவில் பிறந்தார். வங்காள குடும்பத்தை சேர்ந்தவரான இவர் இவரது தந்தையான சுரேந்திரநாத் மஜூம்தார் மருத்துவ அதிகாரியாக ஹரியானாவில் இருந்தபோது பிறந்தவர். தந்தையின் வேலைநிமித்தமாக ஊர் ஊராக குடும்பத்தை மாற்றியதால் பல ஊர்களுக்கு இடம் மாறி பல பள்ளிகளில் இவர் படிக்க நேர்ந்தது. கடைசியில் டெல்லியில் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த நேரத்தில் இந்திய அளவில் சுதந்திர தாகம் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. வீட்டில் கோபமாக பெற்றோர்கள் மற்றவர்கள் அதை பற்றி பேச இவருக்கும் இவரின் சகோதரிக்கும் இந்திய போராட்டத்தில் இணைய ஆசைப்பட்டனர். அதன் விளைவாக சக ஆங்கிலோ இந்திய பெண்களை தூற்றவும் செய்தனர். ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பின்னர் வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தபோது இவரது பள்ளியில் இருந்து இவரும் இவரது சகோதரியும் வரவேற்புக்கு நிறுத்தப்பட்டதை மறுக்க முடியாமல் போனதை பற்றி வருத்தமுடன் குறிப்பிட்டுள்ளார். அந்த நேரத்தில் இவருக்கு வயது 11 மட்டுமே. 


பின்னர் இவரும் இவர் சகோதரியும் லாகூரில் கின்னர்ட் கல்லூரியில் படிக்கும்போது பைபிள் ஆசிரியர் இந்து மதத்தை பற்றி கேவலமாக பேசியதை கண்டு கொதித்தெழுந்து தங்கள் தந்தையிடம் விவரங்களை கூற அவர் பகவத்கீதையின் சாரசாரம்களை இவர்களுக்கு விவரிக்க மறுநாள் பகவத் கீதையின் சாராம்சங்களுடன் அவரை எதிர்கொள்ள அதன் பிறகு அந்த ஆசிரியர் இந்துமதத்தை பற்றி பேசுவதை விட்டுவிட்டார். பின்னர் இந்திரபிரஸ்தா கல்லூரி மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகங்களில் படித்தார். பின்னர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறை பேராசிரியராக பணியாற்றினார். 


கி.பி.1936ல் தன்னை விட 20 வயது மூத்தவரான ஜே‌.பி. கிருபாளினியை திருமணம் செய்ய முடிவெடுத்தார். வயது பிரச்சினையால் இருவர் குடும்பத்திலும் ஒப்புக்கொள்ள வில்லை. காந்தியடிகள் இருதரப்பிலும் பேசி திருமணத்தை நடத்தி வைத்தார். கி.பி.1940ல் அகில இந்திய மகிளா காங்கிரஸும் இவரால் நிறுவப்பட்டது. கி.பி.1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இந்திய பிரிவினை கலவரத்தின் போது காந்தியடிகளுடன் கலங்காமல் கொல்கத்தாவிலுள்ள நவகாளி பகுதிக்கு சென்று அமைதி ஏற்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். அரசியல் நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலமைப்பு சாசனம் ஏற்படுத்தும் குழுவிலும் இருந்துள்ளார். சுதந்திரம் அடைவதற்கு முன்னர் நேருவின் உரைக்கு முன்னர் "வந்தே மாதரம்" பாடலை பாடிய பெருமைக்குரியவர்.


சுதந்திரத்திற்கு பிறகு அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டார். கி.பி.1952ல் நடைபெற்ற முதல் மக்களவை தேர்தலில் அவரின் கணவரின் கட்சியின் சார்பாக புதுடெல்லியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். பின்னர் அடுத்த தேர்தலில் கி.பி.1957ல் அதே தொகுதியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளராக வெற்றி பெற்றார். இதற்கிடையில் கி.பி.1960ல் உத்திரபிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும் அந்த மாநில்த்தின் தொழிலாளர், சமூக மேம்பாடு மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். பின்னர் கி.பி.1963ல் முதன்முதலில் இந்தியாவில் முதல் பெண் முதலமைச்சராக உத்திரபிரதேச மாநிலத்தில் பெறுப்பேற்றார். இவரது ஆட்சிக்காலத்தில் அரசு ஊழியர்களின் 62 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் துளியும் அசைந்து கொடுக்காமல் தைரியமாக இருந்து அவர்களின் கோரிக்கையை மறுத்தார். இது அவரின் துணிச்சலான நடவடிக்கையை எடுத்து காட்டிய நிகழ்வாக பார்க்கப்பட்டது. பின்னர் கி.பி.1969ல் மொராஜி தேசாய் காங்கிரஸை விட்டு வெளியேறியபோது இவரும் அவருடன் வெளியேறி என்சிஓ அமைப்பை உருவாக்கினார். கி.பி.1971ல் பைசாபாத் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோற்றவுடன் அரசியல் துறவறம் ஏற்றார். பின்னர் கி.பி.1974 டிசம்பர் 1ல் புதுடெல்லியில் மரணமடைந்தார்.  பள்ளிப்பருவத்திலிருந்து தனது தைரியத்தை படிப்படியாக வளர்த்து கொண்டு நாட்டின் சுதந்திர போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அரசியலில் நுழைந்து இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சராக கான்பூர் தொகுதியின் சார்பாக சட்டமன்ற வேட்பாளராக ஆன இவர் அரசியிலில் தைரியமான முடிவுகளையும் தோல்வியின் போது கலங்காத  மனத்தையும் உடைய சாதனையாளர்.

Comments

Popular posts from this blog

135) கங்கா தேவி

137) காளி பாய்

முன்னுரை