49) நாங்கிலி

நாங்கிலி :


சரித்திரத்தில் எத்தனையோ விசித்திரமான போராட்டங்களை கண்டிருப்போம். அதில் ஆண்களோடு பெண்களும் இணைந்து பங்கு கொண்டு தங்களின் பங்களிப்பை உறுதிப்படுத்திய நிகழ்வுகள் உண்டு. ஆனால் இந்த நாங்கிலி என்ற ஈழவ சமுதாயத்தை சேர்ந்த 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்மணி செய்த போராட்டம் மிகவும் வித்தியாசமானது. அந்த காலகட்டத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உயர்சாதி பெண்களை தவிர மற்றவர்கள் தங்கள் மார்பகங்களை மறைக்கக்கூடாது என்றும் மார்பகங்களின் கணத்திற்கேற்ப முலை வரி என்று வரியை கட்டவும் நேர்ந்தது. இதை எதிர்த்து தன் மார்பகங்களை அறுத்து கொண்டு உயிர் விட்டவர் தான் இந்த வீரப்பெண்மணி நாங்கிலி.

திருவாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த சேர்த்தாலா என்னுமிடத்தில் வாழ்ந்து வந்தவர் நாங்கிலி என்ற 30‌ வயது ஈழவ இனத்து பெண்மணி. ஒரு கட்டத்தில் இவர் வெறுப்படைந்து மார்பக வரி (முலை வரி) கட்டுவதில்லை என்று உறுதி கொண்டார். அந்த காலத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் பெண்களின் மார்பகங்களின் அளவுக்கு ஏற்ப வரி விதிப்பு இருந்தது. அதற்கு முலைவரி அல்லது முலைக்கர்ணம் என்று பெயர். பெரிய மார்பகங்கள் என்றால் அதற்கேற்ப வரி. வரி கட்ட முடியாதவர்களின் மார்புகள் அறுத்தெறியப்படும். நாங்கிலிக்கு பெரிய மார்பகங்கள் என்பதால் அவருக்கு இரட்டை வரி விதிக்கப்பட்டது. மார்பு வரியை கட்டுவதை பெரிய அவமானமாக கருதிய நாங்கிலி அதை கட்டாததால் முலைக்கர்ணம் பார்வத்தியார் (முலைக்கர்ணம் வசூலிப்பவர்) அவரிடம் வரிவசூல் செய்ய அவரின் குடிசைக்கு போக கொஞ்சம் பொறுங்கள் என்று கூறி குடிசைக்கு உள்ளே போய் வாழையிலையை வெட்டி விளக்கொன்றை வைத்து தனது இரு மார்பகங்களையும் அறுத்து தந்து அப்படியே உதிரப்பெருக்கு தாங்காமல் உயிர் விட்டார். இந்த நிகழ்வு கி.பி.1803ல் நடந்ததாக கூறுகிறார்கள். மனைவியின் மீது பேரன்பு  கொண்ட கணவர் சிறுகண்டனும் அவரின் மறைவு துக்கம் தாங்காமல் அவளது சிதையில் விழுந்து மாண்டது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவள் வாழ்ந்த இடமே "முலைச்சிபரம்பு (மார்பக பெண் வாழ்ந்த இடம்)" என்ற பெயரில் வழங்கப்பட்டது. தற்போது அதை வரலாற்றின் சுவடுகளிலிருந்து மறைத்து விட விரும்பி "மனோரமா காவலா" என்று மாற்றினார்கள். 

 பின்னாளில் கி.பி.1924ல் இச்சட்டம் முற்றிலுமாக நீக்கப்பட்டதாக கூறுகிறார்கள். இந்த மாதிரி விசித்திரமான என்று கூட சொல்லக்கூடாது கேவலமான சட்டங்கள் கூட அந்த நாட்களில் இருந்திருக்கிறது. அதை எதிர்த்து அந்த நாட்களிலையே 220 வருடங்களுக்கு முன்பே தன் அதிரடி புரட்சியால் தன் உயிர்நீத்து சமுதாயத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய வீரப்பெண்மணியான நாங்கிலியின் தியாகத்தை போற்றுவோம்.

Comments

Popular posts from this blog

135) கங்கா தேவி

137) காளி பாய்

முன்னுரை