57) சதா கவுர்

சதா கவுர் (கி.பி.1762-1832) :


தனது நாட்டை காப்பாற்ற கணவரின் மரணத்திற்கு பின்னர் வாள் ஏந்தி போர்களத்தில் புகுந்த ராணி இவர். தனது மருமகனான மகாராஜா ரஞ்சித் சிங் தனது குழந்தை பருவத்தில் இவரது மகளை திருமணம் செய்து கொண்டதால் அவரது தந்தை மரணத்திற்கு பின்னர் அவரது நாட்டையும் காப்பாற்றி அவரை ஒரு மகாராஜாவாக உருவாக்கிய பெண்மணி இவரே.

இவர் கி.பி.1762ல் இன்றைய பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தில் உள்ள ரவுக் கலன் என்னும் ஊரில் தலிவால் ஜாட் குடும்பத்தில் தஸ்வந்த் சிங் தலிவால் என்பவருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு 7 வயதில் கன்ஹையா மிஸ்ல் தலைவரான ஜெய்சிங் கன்ஹையாவின் மகனான குர்பக்ஷ் சிங்கை மணந்தார். இருவருக்கும் கி.பி.1782ல் ஒரே மகளாக மெஹ்தாப் கவுர் பிறந்தார். இவரது கணவரான குர்பக்ஷ் சிங் சுகர்சாகியா மிஸ்ல், ராம்கார்ஹியா மிஸ்ல் மற்றும் சன்சார் சந்த் கடோச் ஆகியோருக்கு எதிரான போரில் இறந்தார். பின்னர் தன் மாமனார் ஜெய்சிங் யோசனைப்படி தன் மகளை  சுகர் சாகியா மிஸ்ல் தலைவரின் மகனான இரஞ்சித் சிங்கிற்கு கி.பி.1786ல் திருமணம் செய்து கொடுத்தார். அந்த நேரத்தில் இரஞ்சித் சிங்கிற்கு வயது 6. கி.பி.1789ல் மாமனார் ஜெய்சிங் கன்ஹையா மறைவுக்கு பின்னர் சதா கவுர் கன்ஹையா மிஸ்ல் தலைவரானார். கி.பி.1792ல் ரஞ்சித் சிங் தந்தை மகான் சிங் மறைவுக்கு பின்னர் அவர் சுகர்சாகியா மிஸ்ல் தலைவரானார். அவருக்கு 12 வயதே ஆகியிருந்த காரணத்தால் சதா கவுர் இரண்டு இராஜ்ஜியங்களுக்கும் பொறுப்பாக இருந்து ஆட்சி புரிந்தார். தன் மருமகனான இரஞ்சித் சிங்கை பெரிய அளவில் வளர்த்துவிட முயற்சிகள் செய்தார். இந்த நேரத்தில் கி.பி.1798ல் இரஞ்சித் சிங் இரண்டாவது திருமணம் செய்தது இவருக்கு பிடிக்காவிட்டாலும் இராஜ்ய காரியங்களுக்காக ஏற்றுக்கொண்டார். இந்த நேரத்தில் தான் கி.பி.1799ல் லாகூரை ஆண்டு வந்த பாங்கி மிஸ்ல் ஆட்சியில் அதிருப்தி கொண்டிருந்த மக்கள் இவர்களை அழைக்க நல்ல வாய்ப்பாக அமைந்தது. இரஞ்சித் சிங் மற்றும் சதா கவுர் 25000 வீரர்களுடன் வர லாகூர் மக்களே கோட்டை கதவுகளை திறந்து விட ரஞ்சித் சிங் லோஹோரி வாயில் வழியாகவும் சதா கவுர் டெல்லி வாயில் வழியாகவும் லாகூருக்கு நுழைந்து லாகூரை கைப்பற்றினார்கள். பின்னர் மெல்ல அமிர்தசரஸ், சினியோட், கசூர், அட்ஹாக், ஹசாரா போர்களில் சதா கவுர் உடனிருந்து அவருக்கு வெற்றியை பெற்று கொடுத்தார். மெல்ல கி.பி.1801ல் இரஞ்சித் சிங்கை லாகூரின் மன்னராக ஆக்கி மெல்ல சீக்கிய சாம்ராஜ்யம் அமைய அடிவகுத்தார். 

பின்னர் இரஞ்சித் சிங் குழுக்கள் தான் போரில் தன் தந்தையான குர்பக்ஷ் சிங்கை கொன்றது என்பதை உணர்ந்த இவரது மெஹ்தாப் கவுருக்கும் இரஞ்சித் சிங்கிற்கும் இடையே பூசல்கள் ஏற்பட்டது. அவர் இரண்டாவது திருமணம் செய்தது வேறு மெஹ்தாப் கவுருக்கு கோபத்தை கிளறியது. தம்பதியருக்கு ஷேர் சிங் என்ற மகன் பிறந்தாலும் இவருக்கும் ஒத்துவரவில்லை. மெஹ்தாப் கவுர் தாய் வீட்டுக்கு வந்தார். உடல்நல குறைவினால் அவர் கி.பி.1813ல் இறக்க அந்த நேரத்தில் அமிர்தசரஸில் இருந்த இரஞ்சித் சிங் கடைசி காரியங்களுக்கு செல்ல வில்லை. இது சதா கவுருக்கு மன வருத்தத்தை அளித்தது. பின்னர் இருவருக்கும் முரண்பாடுகள் வர இரஞ்சித் சிங் சதா கவுரின் ஆட்சி பகுதிகளை அபகரிக்க ஆரம்பித்தார். ஆனாலும் அவரால் கைப்பற்றப்பட்ட பெரும்பாலான பகுதிகளை சதா கவுர் மீண்டும் கி.பி.1821ல் பெற்றார். இதற்கிடையில் ஆங்கிலேயர்கள் பலம் பெற்று வர சதா கவுர் ஆங்கிலேயரின் உதவியை நாட அவர்களும்  இரஞ்சித் சிங்குடன் வீணான பிரச்சினைகள் எதற்கு என்று ஒதுங்கி கொண்டனர். கி.பி.1832ல் லாகூரில் சதா கவுர் தனது 60வது வயதில் மறைந்தார். மாபெரும் ஆங்கில சாம்ராஜ்யத்திற்கு போட்டியாக இருந்த மராத்திய சாம்ராஜ்யத்திற்கு காலத்தில் அவர்களின் பலம் குறைய ஆரம்பித்த நேரத்தில் அதை உணர்ந்து சீக்கிய சாம்ராஜ்யம் அமைக்க உதவிகள் செய்து இரஞ்சித் சிங்கை தயார்படுத்திய பெண்மணி இவரே. அவரின் வெற்றியின் பிண்ணனியில் உள்ளவரும் இவரே.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்