59) பண்டித ரமா பாய்
பண்டித ரமாபாய் (கி.பி.1858-1922) :
இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. பிறப்பால் பிராமணனாக இருந்தாலும் பின்னர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி ஆதரவற்றோருக்கு முக்தி மிஷன் நிறுவி சேவைகள் செய்தவர். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதன்முதலில் சமஸ்கிருதத்தில் பண்டிதா மற்றும் சரஸ்வதி பட்டங்களை பெற்றவர். காங்கிரஸ் இயக்கத்தின் ஆரம்பகாலங்களில் பங்கு கொண்ட பெண்மணிகளுள் இவரும் ஒருவர்.
இவர் கி.பி 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி மராத்தி சித்பவன் பிராமண குடும்பத்தில் ரமாபாய் டோங்ரே என்ற பெயரில் பிறந்தார் சமஸ்கிருத அறிஞர் ஆனால் இவரது தந்தை ஆனந்த் சாஸ்திரி டோங்ரே இவருக்கும் இவரது சகோதரருக்கும் வீட்டிலேயே சமஸ்கிருதத்தை கற்பித்தார். இவர் தனது குடும்பத்துடன் இந்தியா முழுவதும் பயணம் செய்து யாத்திரை தலங்களில் பொது பேச்சுகளில் பங்கு கொண்டார். கி.பி.1876-78ல் பெரும் பஞ்ச காலத்தில் இவரது தாய்,தந்தை மறையவே இவரும் இவரது சகோதரரான ஶ்ரீனிவாஸும் குடும்ப பாரம்பரியத்தை தொடர்ந்தனர். இவரது சமஸ்கிருத புலமையை பற்றி கேள்விப்பட்ட கல்கத்தா பல்கலைகழக பண்டிதர்கள் இவரை பேச அழைத்தனர். கி.பி.1878ல் கல்கத்தா பல்கலைக்கழகம் இவரது அறிவை மெச்சி பண்டிதா மற்றும் சரஸ்வதி பட்டங்களை அளித்தது. இந்தியாவில் முதன்முறையாக இந்த பட்டங்களை பெற்ற பெண்மணியாக பெருமை பெற்றார். கி.பி.1880ல் இவரது சகோதரர் மறைந்தார். அதன் பின்னர் இவர் பெங்காலி வழக்கறிஞர் பிபின் பிஹாரி மேத்வியை திருமணம் செய்தார். இவர்களுக்கு மனோரமா என்ற மகள் பிறந்தார். கி.பி.1882ல் இவரது கணவர் மறைந்தவுடன் பூனே சென்று பெண் கல்வியை மேம்படுத்த ஆர்ய மகிளா சமாஜத்தை நிறுவினார். கல்வியை பார்க்க நியமிக்கப்பட்ட ஹண்டர் கமிஷனில் இவர் அளித்த பரிந்துரைகள் விக்டோரியா மகாராணியை அடைந்தது. ரமாபாய் பெண்கள் கல்வி மற்றும் மருத்துவ மிஷினரி பணிகளில் ஈடுபட்ட கிறிஸ்தவ அமைப்புகளுடன் தொடர்பு கொண்டார். இந்த நேரத்தில் தனது முதல் புத்தகமான ஸ்திரி தர்ம நீதி புத்தகத்தை எழுதினார். கிறிஸ்தவ மிஷினரிகளுடன் தொடர்புடன் மருத்துவம் பயில பிரிட்டனுக்கு சென்றார். ஆனால் இவரது காதுகோளாமை பிரச்சினையினால் மருத்துவ படிப்புகளிலிருந்து நிராகரிக்கப்பட்டார். இந்த நேரத்தில் அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். ஆனாலும் இவர் சைவ உணவுகளை தொடர்ந்தார். பின்னர் இவர் தனது உறவினரும் முதல் மருத்துவ பட்டம் பெற்ற பெண்மணியான ஆன்ந்திபாய் ஜோஷியின் பட்டமளிப்புக்கு அமெரிக்கா சென்றார். இவரது முக்கியமான புத்தகமான தி ஹைகாஸ்ட் வுமன் புத்தகத்தை ஆனந்திபாய் ஜோஷிக்கு அர்ப்பணித்தார். பின்னர் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை விதவைகளுக்காக பள்ளி தொடங்க நிதி திரட்டி "சாரதா சதன்" என்ற பள்ளியை கி.பி.1889ல் பூனேவில் தொடங்கினார். இவர் கிறிஸ்தவ மத பிரச்சாரம் செய்யவில்லை என்றாலும் பல இந்து குழந்தைகள் மதம் மாறியதால் சீர்திருதத்த வாதிகளின் நம்பிக்கையை இழந்தார். அதனால் பூனேவுக்கு 60 கி.மீ தூரத்தில் உள்ள கேட்கானுக்கு பள்ளியை மாற்றி "முக்தி மிஷன்" என்ற பெயர் மாற்றினார். பின்னர் இதுவே "ரமாபாய் முக்தி மிஷன்" என்ற பெயரில் வழங்கப்பட்டது. கி.பி.1896ல் மஹாராஷ்டிரா கடும் பஞ்ச காலத்தில் ஆதரவற்ற பெண்களை முக்தி மிஷனுக்கு அழைத்து வந்தார்.
இவர் சிறு வயதிலையே திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளிலையே விதவையாக ஆனதால் அந்த துயர் கொண்டவர்களை காப்பாற்றி அவர்களின் மேம்பாட்டுக்கு பாடுபட ஆரம்பித்தார். இவரின் ஒரே மகளான மனோரமா பம்பாய் பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டம் பெற்று மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்று படித்து இந்தியா திரும்பி தாயுடன் பணிபுரிந்தார். இவரது மகள் மனோரமா குல்பர்காவில் கிறிஸ்டியன் உயர்நிலை பள்ளியின் முதல்வராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் ரமாபாயின் உடல்நிலை கி.பி.1920களில் மோசமாக தனது முக்தி மிஷன் பொறுப்புகளுக்கு அவரை நியமித்தார். ஆனால் கி.பி1921ல் அவரது மகளான மனோரமா மரணம் அடைந்தது இவருக்கு அதிர்ச்சியை அளித்தது. மகள் இறந்த 9 மாதங்களுக்கு பிறகு இவரும் ஏப்ரல், 5 1922ல் மரணம் அடைந்தார். இந்திய பெண்களின் முன்னேற்றத்திற்கு இவர் ஆற்றிய சேவைகளை போற்றும் வகையில் கி.பி.1989ல் இவரது நினைவு தபால்தலை இந்திய அரசு வெளியிட்டது. பம்பாயில் இவரது நினைவாக "பண்டித ரமாபாய் மார்க்" என்று சாலைக்கு இவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment