63) மஹாபிரி தேவி

மஹாபிரி தேவி ( ??? - கி.பி.1857) :


இந்திய சரித்திரம் கண்ட வீர பெண்மணிகளுள் இவரும் ஒருவர். இவர் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தாலும் அந்த மக்களின் அடிப்படை தேவைகளுக்காகவும் அவர்களின் இழிநிலை நீங்கவும் பாடுபட்ட சமூக சேவகியும் கூட.

இவர் இன்றைய உத்திரபிரதேசத்திலுள்ள மீரட்டிற்கு அருகிலுள்ள முஃஸாபர்நகரிலுள்ள முண்ட்பர் என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட பாங்கி குலத்தில் பிறந்தவர். தங்களது இனத்தினர் சுகாதார கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் இருப்பதை கண்டு அவர்களை நல்வழிப்படுத்தி கெளரவமான நிலைக்கு கொண்டு வருவும் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படவும் பாடுபட்டார். இந்த நேரத்தில் கி.பி.1855ல் முஸாபர் நகரிலுள்ள ஜாட் இனத்தவர்கள் ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்த மறுத்துவிட்டனர். இதனால் பெரும் கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் தக்க நேரம் பார்த்து இருந்தனர். கி.பி.1857ல் மீரட்டில் சுதந்திர போராக சிப்பாய் கலகம் தொடங்கி வட இந்தியா முழுவதும் பரவ தொடங்கியது. இந்த நேரத்தில் ஆங்கிலேயர்கள் கிளர்ச்சியை அடக்குவதாக கூறிக்கொண்டு முஸாபர் நகரிலுள்ள விவசாயிகளை கொன்று குவித்தனர். இதனால் கோபமுற்ற மஹாபிரி தேவி தன்னுடன் சேர்ந்த பெண்களை அழைத்துக்கொண்டு கையில் வாள், கத்தி, கட்டைகளுடன் சென்று ஆங்கிலேயர்களை தாக்கினர். தாங்களும் கொல்லப்படுவோம் என்று தெரிந்தும் பெரிய படைகளின் உள்ளே புகுந்து ஆங்கிலேயர்களை வெட்டி குவித்தனர். முடிவில் பெரும்படையின் முன்னே அந்த 22 வீரப்பெண்களால் வெற்றியை சுவைக்க முடியவில்லை. அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விழுந்தனர்.‌ தாங்கள் துப்பாக்கியுடன் கூடிய பெரும்படையுடன் வெறும் கத்தி வாளுடன் சென்று மோதினால் கொல்லப்படுவோம் என்று உறுதியாக தெரிந்தும் ஆங்கிலேயர்களை கொன்று குவித்து வீர மரணம் அடைந்தனர். இந்த பாரத நாடு இத்தகைய வீரபெண்மணிகளின் தியாகத்தினாலும் தான் சுதந்திர கனலை அணையாமல் ஏற்றிக்கொண்டு சுதந்திர போராட்டங்கள் முன்னிலும் வேகமெடுத்தது. இவர்களின் உயிர்தியாகம் நடந்த மே 8, 1857ம் தேதிக்கு அடுத்த இரண்டு நாளில் மே 10ல் மீரட்டிலும் கலவரம் பற்றி கொண்டது. மீரட்டின் புரட்சியில் முஸாஃபர் நகர் மக்களே பெரும் பங்கு வகித்தனர். இன்றும் முஸாஃபர் நகரிலுள்ள மக்கள் மஹாபிரி தேவி மற்றும் உயிர்த்தியாகம் செய்த அந்த 22 பெண்களையும் நினைவு கூறுகின்றனர். சில வரலாற்று தகவல்களின் படி இந்திரா கவுர், மன் கவுர், ரஹிமி, தேவி தியாகி, பக்தாவாரி, ஹபிபா, உம்டா, ஆஷா தேவி, ஷோபா ஆகியோர்கள் இந்த 22 பெண்களுள் ஒருவராக இருந்தனர்.

Comments

Popular posts from this blog

135) கங்கா தேவி

137) காளி பாய்

முன்னுரை