64) இராணி ஷிரோமணி

 ‌ராணி ஷிரோமணி (??? - கி.பி.1812) :


இந்திய வரலாற்றில் அடக்குமுறைக்கு எதிராக போராடிய ராணிகளுள் இவரும் ஒருவர். பழங்குடியினரின் நிலங்களை மக்களிடமிருந்து ‌நிலச்சுவாந்தார்களுக்கு கொடுத்தவற்றை திரும்ப போராடி மக்களுக்கே கிடைக்க செய்த ராணி.

இவர் மேற்கு வங்காளத்திலுள்ள மிட்னாபூர் மாவட்டத்திலுள்ள கர்னாகார்க் என்ற பகுதியின் ராணி. இவர் கர்னாகார்க் பகுதியின் கடைசி அரசரான ராஜா அஜித் சிங் என்பவரின் இரண்டாவது மனைவி. ராஜா வாரிசில்லாமல் மறையவே இராஜ்யம் அவரது இரண்டு ராணிகளின் வசம் வந்தது. மூத்த ராணி பாபானி மறைந்தவுடன் இளைய ராணியான ராணி ஷிரோமணி வசம் நாடு வந்தது. பழங்குடியினரின் நிலங்களை அவர்கள் வரி கட்ட மாட்டோம் என்றதால் பிரிட்டிஷ் அரசு அவர்களிடமிருந்து நிலங்களை பிடுங்கி நிலச்சுவாந்தார்கள் வசம் ஒப்படைத்தது. இதனால் கி.பி.1782 முதல் ராணி ஷிரோமணி ஆங்கிலேயருக்கு எதிராக போராட ஆரம்பித்தார். ஆயுதமேந்தி 124 கிராமங்களை சூறையாடி சுவார் விவசாயிகளின் நிலங்களை அவர்களுக்கே அழித்தார். ‌ஆங்கிலேயரிடம் இருந்து தனது பாதுகாப்புக்காக சுவார் என்னுமிடத்தில் கோட்டையை கட்டினார்.


 கி.பி.1798 மார்ச் மாதத்தில் மிட்னாபூரில் இருந்த ஆங்கிலேயரை தாக்க நேரம் பார்த்து வந்தார். அந்த நேரத்தில் மிட்னாபூர் ஆங்கில கலெக்டர் கல்கத்தா தலைமை அலுவலகத்துக்கு இன்று மிட்னாபூரை சுவார் பகுதியினர் தாக்க போவதாக தெரிகிறது. அதனால் கரூவூலத்தை உங்களின் பாதுகாப்பில் அனுப்ப ஆசைப்படுகிறேன் என்று கடிதம் எழுதினார். ஆனாலும் ஆங்கிலேயர்களின் உள்ளூர் கைக்கூலிகள் ஆங்கிலேயர்களின் பெரும்படை சுவாரை தாக்க போவதாகவே வதந்தி கிளப்பினர். ஆனால் ஒரு மாதம் கழித்தே சுவாரை தாக்கினர். கோட்டையை கைப்பற்றி ராணி ஷிரோமணியை கைது செய்தனர். உடனே கிளர்ச்சியாளர்கள் கோட்டையில் ஆங்கிலேயர்களை முற்றுகையிட்டு அவர்களுக்கு உணவு போக விடாமல் தடுத்து பட்டினி போட்டனர். இதனால் ஆங்கிலேயர்களுக்கு இறங்கி வருவதை தவிர வேறு வழியில்லாமல் இராஜதந்திரமாக இறுதிவரை போராட தயாராக இருந்த பழங்குடியினருக்கு அவர்களின் நிலங்களை திரும்ப கொடுத்தனர். இதனால் போராட்டம் வெற்றியடைந்தாலும் ஆங்கிலேயரின் ராஜதந்திரமே வெற்றி பெற்றது. இராணி ஷிரோமணி சிறையிலையே கி.பி.1812ல் மறைந்தார்.‌ சுதந்திரத்திற்காக போராடிய இவர் "மிட்னாபூரின் லக்ஷ்மி பாய்" என்ற பெயரில் ஆங்கிலேயர்களால் குறிப்பிடப்பட்டார். ஆனாலும் இவர் ஜான்சி ராணி லக்ஷ்மி பாய்க்கு காலத்தால் முந்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்