67) தாரா ராணி ஶ்ரீனிவாஸ்த்வா
தாரா ராணி ஶ்ரீனிவாஸ்த்வா :
இந்திய சுதந்திரம் எண்ணற்ற தியாகிகளின் இரத்தத்தை சிந்தி அவர்களின் தியாகத்தால் பெறப்பட்டது. அப்படிப்பட்ட தியாகிகளுள் ஒருவராக கணவரே போராட்டத்தில் குண்டடிப்பட்டு இறந்தாலும் தன் உயிரையும் துச்சமாக மதித்து போராட்டத்தை தொடர்ந்த வீர பெண்மணி இவர்.
தாரா ராணி ஶ்ரீவத்சவா இன்றைய பீகாரின் தலைநகரான பாட்னா நகருக்கு அருகிலுள்ள சரண் என்னுமிடத்தில் பிறந்தார். சினுவயதிலையே இவருக்கு புலேந்திர பாபுவுடன் திருமணம் நடந்தது. இவர் சுதந்திர போராட்ட இயக்கங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டு தனது கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பெண்களை போராட்ட களங்களில் செயல்பட தூண்டினார். இந்த நேரத்தில் தான் மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி வைத்தார். இதனால் தாரா ராணி மற்றும் அவரது கணவரான புலேந்திர பாபு ஆகியோர் சிவான் காவல்நிலையத்தில் இந்திய தேசிய கொடியை ஏற்றினால் பெரிய எதிர்ப்பாக கருதப்படும் என்று முடிவு செய்து காவல் நிலையத்தை முற்றுகையிட அணிவகுப்பினை ஏற்பாடு செய்தனர். காவல்துறை அவர்களை கொடியை ஏற்றவிடாமல் தடுத்தது. அவர்களை கலைக்க தடியடி நடத்தியது. அதிலும் கலங்க அணிவகுப்பை தடுக்க துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் புலேந்திர பாபு காயம்பட்டார். உடனே அவரது மனைவியான தாரா ராணி தனது புடவையில் இருந்து கிழித்த துணிகளை வைத்து கணவரின் காயங்களை கட்டி விட்டு தனது கையில் தேசிய கொடியை ஏந்தி முற்றுகையை தொடர்ந்தார். அங்கு கொடியை ஏற்றிவிட்டு திரும்பி வந்த பார்த்த போது அவரின் கணவரான புலேந்திர பாபுவின் உடலில் உயிர் இல்லை. தனது கணவர் துப்பாக்கி சூட்டின் காயங்களால் இறந்து விட்டதை உணர்ந்தாள். கணவர் மறைந்தாலும் இவரும் தொடர்ந்து விடுதலை போராட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டு வந்தார். இவரின் கணவரின் தியாகத்தை போற்றும் வகையில் ஆகஸ்ட் 15, 1942ல் சாப்ராவில் பிரார்த்தனை கூட்டம் நடந்தது. அதன் பின்னரும் இவர் இந்தியா சுதந்திரம் அடையும் வரை தொடர்ந்து விடுதலை போராட்ட நிகழ்வுகளில் தவறாது பங்கு கொண்டு வந்தார். கணவர் மறைந்தாலும் கொண்ட லட்சியத்திற்காக உயிரையும் துச்சமாக மதித்து அவரின் தியாக உள்ளத்தால் உயர்ந்து நிற்கிறார் இந்த வீர பெண்மணி தாரா ராணி ஶ்ரீ வத்சவா (என்ற) தாரா ராணி பாபு...

Comments
Post a Comment