76) இராணி சேது லட்சுமி பாய்
சேது லட்சுமி பாய் (கி.பி.1895-1985) :
இந்திய சரித்திரத்தில் எண்ணற்ற மகாராணிகள் தங்களது வீரத்தாலும் தியாகத்தாலும் இடம்பெற்று உள்ளனர். திருவாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த மகாராணியான இவர் (மகனுக்கு பட்டமேற்கும் வயது வரும்வரை அவருக்காக ரீஜென்ட்டாக பதவியில் இருந்தார்) பெண்களின் நலனுக்காகவும் பெண் கல்விக்காகவும் மிகவும் பாடுபட்டவர். புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவி வர்மாவின் மகள் வயிற்று பேத்தி இவர்.
கி.பி.1895 நவம்பர் 19ல் மாவேலிக்கரையில் ஆயில்யம் நல் மஹாபிரபா மற்றும் கேரள வர்மாவுக்கு மகளாக பிறந்தார். இவரது தாயார் புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவி வர்மாவின் மகள். இவர் முந்தைய அரசரின் மனைவியான சேது பார்வதி பாயின் சகோதரி. புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவி வர்மாவின் மகள் வயிற்று பேத்தி இவர். இவர் கி.பி.1906ல் ஹரிபாட் அரச குடும்பத்தை சேர்ந்த ஶ்ரீராம வர்மாவை தனது 11வது வயதில் மணந்தார். கி.பி.1910ல் இருவரும் கணவன் மனைவியாக குடும்பம் நடத்த தொடங்கினர். கி.பி.1910ல் கர்ப்பமானாலும் கரு சிதைவு ஏற்ப்பட்டது. பின்னர் கி.பி.1912ல் மகாராஜா மூலம் திருநாள் ஜந்தாம் ராம் வர்மா இவரை ஶ்ரீபாடோம் தோட்டத்தின் கட்டுப்பாட்டு உரிமையை வழங்கினார். இந்த நேரத்தில் தான் இவரது சகோதரியான சேது பார்வதி பாய் அடுத்த அரசரான சித்திரை திருநாள் இரண்டாம் பலராம வர்மாவை பெற்றெடுத்தார். பின்னர் கி.பி.1916ல் கார்த்திகை திருநாள் லட்சுமி பாய் கி.பி.1922ல் உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா ஆகியோரையும் இவரது சகோதரி பெற்றார். சேது லட்சுமி பாய்க்கு கி.பி.1923ல் முதல் குழந்தையாக உத்திரம் திருநாள் லலிதாம்பா பாயும் கி.பி.1926ல் இந்திரா பாய் என்ற இரு மகள்களும் பிறந்தனர்.
கி.பி.1924ல் முந்தைய அரசர் செப்லிஸ் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மறைந்த போது அவரது மகனான சித்திரை திருநாள் இரண்டாம் பலராம வர்மாவுக்கு 12 வயது தான் ஆகியிருந்தது. அதனால் அவரது தாயாரான சேது பார்வதி பாயின் எதிர்ப்பையும் மீறி மருமக்கள் தாயம் முறையில் இவருக்கு ரீஜெண்ட் ராணியாக பட்டம் சூட்டப்பட்டது. மூலம் திருநாள் ஐந்தாம் ராம வர்மாவின் ஆட்சியில் பெரியார் இரண்டாவது முறை சிறையில் அடைக்கப்பட்ட 4ம் மாதத்தில் அவர் இறந்ததை ஒட்டி ரீஜெண்ட் ராணியாக ஆட்சியேறிய சேது லட்சுமி பாய் அவர்கள் காந்தியடிகளுடன் நடந்த சந்திப்பை அடுத்து பெரியாரை சிறையிலிருந்து விடுதலை செய்தார். எல்லோரும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற உத்தரவையும் இட்டார். இந்த நிகழ்வினால் பெரியார் "வைக்கம் வீரர்" என்ற பெயர் பெற்றார். இவரது நிர்வாகத்தில் தான் தேவதாசி முறை ஒழிப்பு மற்றும் மிருக பலி தடை ஆகிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. கி.பி.1925ல் பஞ்சாயத்து வழியில் உள்ளாட்சி நடத்துவதற்கு சட்டம் கொண்டு வந்தார். மருத்துவ சேவைகளுக்காக மருத்துவமனை அமைத்து ஆங்கில வழி மருத்துவம் படித்த டாக்டர்களை பணியில் அமர்த்தினார். கி.பி.1928ல் நாயர்கள் சமுதாயத்தின் தாய்வழி முறை அகற்றப்பட்டு ஆணாதிக்க குடும்ப அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. கி.பி.1926ல் பத்திரிகை ஒழுங்குமுறை சட்டத்தை இயற்றினார். ஆனாலும் இது பத்திரிகை சுதந்திரத்தை பறித்ததாக அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திருவாங்கூர் முழுவதும் புதிய நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டது. இவரது ஆட்சியில் கடல் கடந்த சென்ற காரணத்தால் ஜவஹர்லால் நேருவை திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் தரிசனத்திற்கு அனுமதிக்க மறுத்ததும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொலைபேசி சேவைகள் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. கி.பி.1928ல் மத்திய சாலை வாரியம் அமைக்கப்பட்டு திருவாங்கூர் சமஸ்தானம் முழுவதும் நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் அமைக்கபப்ட்டு போக்குவரத்து மேம்படுத்தப்பட்டது. இவரது ஆட்சியில் தான் எர்ணாகுளம்- குயிலான் ரயில் பாதை போடப்பட்டு ரயில்வழி போக்குவரத்தும் தொடங்கியது. அரசின் வருவாயில் 22% கல்வி துறைக்கு செலவழிக்கப்பட்டது. இதன் மூலம் கல்வியறிவு பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்தது. பின்னர் சித்திரை திருநாள் இரண்டாம் பலராம வர்மாவின் 19வது பிறந்தநாளுக்கு பிறகு இவர் ஆட்சியை கி.பி.1931ல் அவரிடம் கொடுத்துவிட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும் கி.பி.1939 வரை ஶ்ரீபாடோம் தோட்டத்து கட்டுப்பாட்டு உரிமையை இவர் தொடர்ந்தார். பின்னர் மகாராஜா சித்திரை திருநாள் இரண்டாம் பலராம வர்மாவிடம் அதை கொடுத்துவிட்டு கணவர் மற்றும் இரு மகள்களுடன் திருவாங்கூரில் வாழ்ந்து வந்தார். சுதந்திரத்திற்கு பின்னர் கி.பி.1949ல் மூத்த மகள் பெங்களூரிலும் இளைய மகள் சென்னையிலும் குடிபுகுந்தனர். உடல் நலமில்லாமல் இருந்த இவர் பெங்களூர் செல்ல முடிவு செய்த வேளையில் அரண்மணை வேலையாட்கள் யூனியனை ஆரம்பித்தனர். பின்னர் ஓய்வுக்காக பெங்களூர் சென்ற இவர் அங்கேயே மகள் வீட்டு அருகிலையே ஒரு பங்களா வாங்கி கொண்டு அங்கேயே கி.பி.1958 முதல் கடைசி காலம் வரை வாழ ஆரம்பித்தார். அதன் பின்னர் திருவனந்தபுரம் வராமலையே தனது 89வது வயதில் கி.பி.1985ல் பெங்களூரில் மறைந்தார். இன்றைய திருவனந்தபுரம் மற்றும் கேரளா மாநிலத்தின் வளர்ச்சிக்கு கல்விக்கு போக்குவரத்திற்கு சீர்திருத்தங்களுக்கு முன்னேற்ற படிகளில் ஆரம்ப படிகளை எடுத்து வைத்து அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் இவர் என்றால் அது மிகையாகாது.

Comments
Post a Comment