79) சரோஜினி நாயுடு

சரோஜினி நாயுடு (கி.பி.1879-1949) :


இந்திய வரலாற்றில் கவிஞராகவும், சமூக ஆர்வலராகவும், இந்திய மாநிலத்தின் முதல் பெண் கவர்னராகவும், காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். கவிக்குயில் என்ற பெயராலும் இந்தியாவின் நைட்டிங்கேல் என்ற சிறப்பு பெயராலும் அழைக்கப்பட்டவர் இவர்.

கி.பி.1879 பிப்ரவரி 13ல் ஹைதராபாத்தில் பெங்காலி குடும்பத்தில் அகோரநாத் சட்டோபாத்யாய் மற்றும் வரதா சுந்தரி தேவிக்கு மகளாக பிறந்தார். எட்டு குழந்தைகளில் இவரே மூத்தவர். இவருக்கு அடுத்த சகோதரரான வீரேந்திரநாத் சட்டோபாத்யாய் புரட்சியாளராக இருந்தார். 1937ல் ரஷ்யாவில் இருந்து நேரத்தில் ஸ்டாலினால் தூக்கிலிடப்பட்டார். மற்ற சகோதரர்கள் கவிஞர்கள் மற்றும் நடிகர்களாவும் இருந்தனர். தந்தை நிஜாம் கல்லூரியில் முதல்வராக இருந்தார். தாயார் பெங்காலி மொழியில் கவிதைகள் எழுதியவர். இதனால் தான் என்னவோ இவருக்கும் பிறப்பிலையே கவிதை எழுத ஆற்றல் பெற்றிருந்தாரோ என்னவோ? காந்தியடிகளால் "பாரத் கோகிலா" என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்பட்டார். தனது 12 வயதில் கவிதை எழுத தொட்ஙகினார்‌. அவரது நாடகமான மகேஷ் முனீர் பாரசீக மொழியில் எழுதப்பட்டது. இவரது முதல் கவிதை புத்தகம் கி.பி.1905ல் இலண்டனில் "தி கிரேட் த்ரெஷோல்ட்" என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இரண்டாவது கவிதை புத்தகம் "தி பேர்ட் ஆஃப் டைம்" என்ற பெயரில் சுதந்திர தாகத்தை பற்றி எழுதப்பட்டது. கி.பி.1917ல் "தி ப்ரோக்கன் விங்க்ஸ்"  வெளியிடப்பட்டது. இளமையில் சென்னையிலும் பின்னர் லண்டனில் உள்ள கிங்க்ஸ் கல்லூரியிலும் கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள கிர்டன் கல்லூரியிலும் படித்தார். லண்டனில் இருந்த போது கோவிந்தராஜூ நாயுடு என்ற மருத்துவரிடம் காதல் கொண்டு பின்னர் கலப்பு திருமணம் செய்தார். தம்பதிகளுக்கு 5 குழந்தைகள் பிறந்தனர். இவரது மகளான பத்மஜா வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்ட களத்தில் கலந்து கொண்டார். கி.பி.1898ல் ஹைதராபாத் திரும்பினார்.

இந்தியா திரும்பிய நேரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்க போராட்டங்களால் ஈர்க்கப்பட்டார். பெண்கல்வி மற்றும் பெண் சுதந்திரம் ஆகியவற்றிற்காக பாடுபட்டார். நிறைய சொற்பொழிவுகளில் உரையாற்றினார். கி.பி.1906ல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றினார். கி.பி.1909ல் முத்துலட்சுமி ரெட்டியை சந்தித்தார். பின்னர் அவருடன் இணைந்து கி.பி.1917 இந்திய பெண்கள் சங்கத்தை உருவாக்கினார். அதே நேரத்தில் அன்னிபெஸண்ட் அம்மையாரின் ஹோம்ரூல் இயக்கத்தின் கோரிக்கையான அனைவருக்கும் ஓட்டுரிமை கோரிக்கையை ஆதரித்தார். கி.பி.1917ல் மகாத்மா காந்தியை சந்தித்து பின்னர் அவரது இணைந்து பணியாற்றினார். கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திர நாத் தாகூர், சரளாதேவி செளதுராணி ஆகியோருடன் இணைந்து ஒத்துழையாமை இயக்க போராட்டங்களில் கலந்து கொண்டார்.  கி.பி.1925ல் இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராக ஆனார். பின்னர் மேலை நாடுகளுக்கு பயணம் செய்து வன்முறையற்ற எதிர்ப்பை ஊக்குவித்தார். கி.பி.1930ல் உப்பு சுத்தியாகிரக போராட்டத்தில் பெண்களை இணைக்க விரும்பாத காந்தியை இவர் சமாதானப்படுத்தி இணைய வைத்தார். காந்தி கைது செய்யப்பட்ட பின்னர் இவரையே தொடர்ந்து வழிநடத்த கூறினார். இதன் காராணமாக முதல் வட்டமேசை மாநாட்டில் இருந்து காங்கிரஸ் விலகியது. பின்னர் காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை அடுத்து இலண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டார். ஆனாலும் பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கி.பி.1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது 21 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் ஜக்கிய மாகாணங்கள் (இன்றைய உத்திரபிரதேசம்) மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டவர் அவரது இறப்பு வரை மார்ச் 1949வரை ஆளுநராக இருந்தார். மார்ச் 2ம் தேதி நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். பெண்கல்வி பெண்ணுரிமை கவிதைகளின் மூலமும் போராட்ட களத்தின் மூலமும் நாட்டின் விடுதலைக்காக போராடிய இவர் இந்தியாவின் நைட்டிங்கேல் என்றும் கவிக்குயில் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்