81) பிரோஃஸா

பிரோஃஸா (Firoza) :


இந்திய வரலாற்றில் எத்தனையோ பெண்கள் தங்கள் பக்தியாலும், தியாகத்தாலும், தன்னலமற்ற சேவையினாலும் மாறா காதலினாலும் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் ஒருவர் தான் இவர். எல்லோரும் அலாவுதீன் கில்ஜி - இராணி பத்மினி ஜோஹர் வரலாற்றை மட்டுமே அறிந்திருப்போம். ஆனால் அலாவுதீன் கில்ஜியின் மகளான இந்த பிரோஃஸா ஜாலோர் வம்சத்து இராஜபுத்திர இளவரசனாக வீரம்தேவ் (பீரம் தேவ் ) மீது காதல் கொண்டு அவரையே மணக்க வேண்டியும் அலாவுதீன் கில்ஜியும் அதற்கு சம்மதித்தும் ஜாலோர் இளவரசர் அந்த காதலை ஏற்றுக்கொள்ளாததால் ஜாலோரை வீழ்த்தியதால் அவரின் காதலன் மரணமடைந்ததை கண்டு மனம் வருந்தி தனது ஒருதலை காதல் நிறைவேறாத வருத்தத்தால் தானும் கங்கையில் விழுந்து உயிர் விட்டாள்.

அலாவுதீன் கில்ஜியின் படைகள் அதன் தளபதி உலாகான் தலைமையில் குஜராத் பகுதிகளை கொள்ளையடித்து சூறையாடியும் இந்து கோயில்களை முஸ்லீம் மசூதிகளாக மாற்றியும் சோமநாதர் கோயிலின் செல்வங்களை சூறையாடியும் தடுக்க முயன்ற கோயிலின் அர்ச்சகர்களை கொன்று குவித்தும் சோமநாதர் கோயிலின் விக்கிரத்தை துண்டு துண்டாக உடைத்தும் எடுத்து வந்தது. வழியில் ஜாலோர் பகுதியின் இராஜபுத்ர அரசனான கன்ஹாத் தேவ் அலாவுதீன் படைகளை தாக்கி சிவலிங்கத்தை மீட்டு ஜாலோரில் அந்த சிவலிங்கத்தை நிர்மாணித்தார். இந்த தோல்வியை தாங்க முடியாத கில்ஜி ஜாலோர் அரசனுக்கு நட்பழைப்பு அனுப்பினார். அவர் சிறந்த மல்யுத்த வீரனான தன் மகன் வீரம் தேவ் செளகானை டெல்லிக்கு அனுப்பினார். கில்ஜி தனது இராஜ்ஜியத்தின் வெல்ல முடியாத மல்யுத்த வீரனான பிண்டுவுடன் வீரம் தேவை மல்யுத்த போட்டியில் மோத சொன்னார். பிண்டுவிடம் மோதலில் வீரம் தேவை பலத்த காயங்களுடன் உயிர் போகும் அளவுக்கு தாக்க சொன்னார். ஆனால் வீரம் தேவ் செளகான் மல்யுத்த போட்டியில் பிண்டுவை எளிதாக வீழ்த்தினார். போட்டியை பார்த்து கொண்டிருந்த அலாவுதீன் கில்ஜிக்கும் அவரது பணிப்பெண்ணாக இருந்து மனைவியான ஆஸாமானி கவாஸ்க்கு பிறந்த மகளான பிரோஃஸாவுக்கு வீரம் தேவ் செளகான் மீது காதல் பிறந்தது. அவர் தனது தந்தையிடம் தனது விருப்பத்தை கூற அவரும் வீரம் தேவிடம் தன் மகளின் காதலை கூறி திருமணம் செய்து கொள்ளுமாறும் முஸ்லீமாக மாறவும் கூறினார். வீரம் தேவ் தான் ஊருக்கு சென்று திருமண ஊர்வலத்துடன் திரும்பி வருகிறேன் என்று கூறிவிட்டு ஜாலோருக்கு வந்து சேர்ந்தார்.

ஜாலோர் வந்தவுடன் அலாவுதீன் கில்ஜியின் படைகள் பக்கத்தில் இந்து கோயில்களை சூறையாடிக் கொண்டு இருப்பதை அறிந்து அவர்களை விரட்டி கோயிலில் கொள்ளையிட்டதை மீட்டார். தன்னை ஏமாற்றி விட்டு சென்றதை அறிந்த அலாவுதீன் கில்ஜி ஜாலோர் மீது போர் தொடுத்தார். ஆனால் பிரோஃஸா அவர் முஸ்லீமாக மாறவிட்டாலும் பரவாயில்லை தான் இந்துவாக மாறி அவரை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் தந்தையை வலியுறுத்தினார். ஜாலோர் இளவரசனை வீழ்த்தி தன் முன் கொண்டு வர கில்ஜி கட்டளையிட்டார். ஜாலோர் மீதான போர் இரண்டு ஆண்டுகள் நீடித்தது. பலமான இராஜபுத்ர அரசான ஜாலோர் முடிவில் வீழ்ந்தது. போரில் கன்ஹாத் தேவ் மற்றும் இளவரசர் வீரம் தேவ் செளகான் போரில் மாண்டனர். ஜாலோர் வீழ்ந்தவுடன் ஜாலோர் பெண்கள் அனைவரும் ஜோஹார் (தீக்குளிப்பு) செய்து கொண்டு கி.பி.1311ல் மாண்டனர். ஜாலோர் முற்றிலும் சூறையாடப்பட்டது. இந்து கோயில்கள் கொள்ளையடிக்கப்பட்டு மசூதிகளாக மாற்றப்பட்டது. இளவரசனின் உயிரற்ற தலையை அலாவுதீன் கில்ஜிக்கு எடுத்து சென்றனர். தன் காதலனின் உயிரற்ற தலையை கண்ட துக்கத்தில் அவர் இல்லாத உலகில் தான் மட்டும் வாழ்வது வீண் என்று முடிவு செய்து கங்கையில் விழுந்து பிரோஃஸா உயிர்விட்டாள். தன்னை காதலிக்காத ஒருவனுக்காக அவன் உயிர் விட்டவுடன் அவனை மறக்க முடியாமல் உயிர்நீத்த பெரோஃஸா ஒருதலை காதலின் சின்னமாக விளங்குகிறாள்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்