84) ஜீஜா பாய்

ஜீஜாபாய் (கி.பி.1598-1674) :


இந்திய சரித்திரத்தில் மராத்திய சாம்ராஜ்யம் அமைத்த வீர சிவாஜியின் தாய் இவர். சிறுவயதில் அன்னையின் வளர்ப்பில் இராமாயண மகாபாரத கதைகளை கேட்டு வளர்ந்தவர் பின்னாட்களில் பெரிய சாம்ராஜ்யத்தை அமைக்க வழிகாட்டியவரே இவர் தான்.

ஜுஜாபாய் கி.பி.1598ல் மஹாராஷ்டிராவில் புல்தானா மாவட்டத்திலுள்ள சிந்த்கேட் அருகே உள்ள தோல்கானில் மஹாலசபாய் ஜாதவ் மற்றும் லகுஜி ஜாதவ் தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவரது தந்தையான லகுஜி ஜாதவ் ஒரு மராட்டிய பிரபு. இளமையிலையே இவர் நிஜாம் ஷாஹி சுல்தான்களின் கீழ் பணிபுரியும் ஷாஹாஜி போன்ஸ்லே என்பவரை மணந்தார். இவர்களுக்கு கி.பி.1623ல் சாம்பாஜி ஷாஹாஜி போன்ஸ்லே என்ற மகனும் கி.பி.1627ல் சிவாஜி போன்ஸ்லே என்ற மகனும் பிறந்தனர். இவருக்கு பிறந்த மகன் தான் பின்னாளில் மராத்திய சாம்ராஜ்யத்தை ஆரம்பித்து வைத்த வீர சிவாஜி. முதல் மகன் சாம்பாஜி கி.பி.1655ல் அப்சல்கான் நடத்திய தாக்குதலில் இறந்து போனார். தன் மகன்களுக்கு இளமையிலையே இராமாயண மகாபாரத கதைகளை கற்று கொடுத்தார். இவர் அளித்த உத்வேகம் தான் பின்னாளில் சிவாஜி மொகலாய சாம்ராஜ்யத்திற்கு எதிராக மராத்திய சாம்ராஜ்யம் படைக்க உத்வேகம் அளித்தது.

 இவரது கணவர் பிஜப்பூர் மற்றும் அகமது நகர் சுல்தான்களிடம் மாறி மாறி வேலை செய்தார். மொகலாயர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்த்தால் தன் வசமிருந்த 6 கோட்டைகளை அவர்கள் வசம் ஒப்படைத்தார். இவரது கணவர் ஷாஹாஜி மோஹிதே குடும்பத்தை சேர்ந்த துஹா பாய் மோஹிதே என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் சிவாஜி, சாம்பாஜி மற்றும் ஜீஜாபாய் ஆகியோரை சிவ்நேரி கோட்டையிலிருந்து பூனேவுக்கு இடம் பெயர செய்தார். அங்கே தன் சார்பாக கோட்டைக்கு பாதுகாவலராக இருந்த "தாதாஜி கொண்ட தேவ்" என்ற பிராமணரின் பொறுப்பில் அவர்களை ஒப்படைத்து கல்வி மற்றும் பல கலைகளை பயிற்றுவிக்க ஏற்பாடு செய்தார். இந்து மதத்தை பற்றியும் துறவிகளின் பெருமைகளையும் எடுத்து கூறியதால் சிவாஜிக்கு இந்து மதத்தின் பால் மிகுந்த பற்று உண்டாயிற்று. பூனே சுற்றியுள்ள சயாத்ரி மலை காடுகளில் சுற்றி அலைந்தார். அதுவே பின்னாளில் மொகலாயர்களை எதிர்த்து கொரில்லா தாக்குதல்கள் நடத்தி வலிமையான மராத்திய இந்து சாம்ராஜ்யம் அமைக்க வழிவகுத்தது. ஜீஜாபாய்க்கு குதிரை சவாரி வாள் வீச்சு அத்துபடியாததால் தன் மகன்களுக்கு  இரண்டையும் கற்று கொடுத்து வளர்த்தார். இவர் பூனேவில் கஸ்பா கணபதி மந்திரை நிறுவினார். பின்னர் கேவரேஷ்வர் கோயில் மற்றும் தாம்பாடி ஜோகேஸ்வரி கோயிலையும் புதுப்பித்து கொடுத்தார்.‌ இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் கி.பி.1674 ஜூன் 6ம் தேதி ராய்காட் கோட்டையில் சிவாஜி மஹாராஜாவாக முடிசூட்டிக் கொண்டார். அடுத்த 12 நாட்களில் இவர் கி.பி.1674 ஜூன் 18ம் தேதி ராய்காட் கோட்டைக்கு அருகிலுள்ள பச்சாட் என்னும் கிராமத்தில் மறைந்தார். இவரை பற்றிய எண்ணற்ற படங்கள் நாடகங்கள் எடுக்கப்பட்டுள்ளது. கி.பி.1999 ஆண்டு இந்திய அரசு இவருக்கு தபால்தலை வெளியிட்டு சிறப்பித்தது. சிவாஜி மகாராஜ் வீரம் மற்றும் நெஞ்சுரம் கொண்டவராக வளர்வதற்கு அன்னை ஜீஜாபாய் ஊட்டிய கல்வி மற்றும் வீரமே தான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்