88) தர்கேஷ்வரி சின்ஹா

தர்கேஷ்வரி சின்ஹா‌ (கி.பி.1926-2007) :


இந்திய வரலாற்றில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட எத்தனையோ பெண்களில் இவரும் ஒருவர். தனது 16வது வயதிலையே வெள்ளையனே வெளியேறு போராட்ட களத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். துணிச்சலுடன் திறமையும் கொண்ட பெண்ணான இவர் சுதந்திர இந்தியாவில் நேரு தலைமையிலான அமைச்சரவையில்  துணை நிதியமைச்சர் பதவியில் இருந்தார்.

இன்றைய பீஹார் மாநிலத்திலுள்ள நாலந்தா மாவட்டத்தின் சண்டிக்கு அருகிலுள்ள துளசிகர் கிராமத்தில் பூமிஹார் குடும்பத்தில் பிறந்தார்.பாட்னாவில் பாங்கிபூர் பெண்கள் கல்லூரியில் படித்தார். பீகார் மாணவர் காங்கிரஸின் தலைவராக இருந்தார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதார பாடத்தில் எம்.எஸ்.சி பட்டம் பெற்றார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக பணிய்ற்றினார். இவர் வழக்கறிஞரான நிதி தேவ் சிங்கை திருமணம் செய்து கொண்டார். சுதந்திரத்திற்கு முன்பு பீஹாரிலுள்ள பார் தொகுதியில் போட்டியிட்டார்.

சுதந்திரத்திற்கு பின்பு கி.பி.1952ல் பாட்னா கிழக்கு தொகுதியிலிருந்து வெற்றி பெற்று மீண்டும் 1957,1962,1967களில் மீண்டும் பார்ஹ் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.நேரு தலைமையிலான அமைச்சரவையில் பணியாற்றிய முதல் பெண் துணை நிதியமைச்சர் இவரே. ஜ.நா தூதுக்குழுவுக்கும் தலைமை தாங்கினார். லால் பகதூர் சாஸ்திரி மறைவுக்கு பின்னர் மொரார்ஜி தேசாய் அணியிலிருந்து அவரை ஆதரித்தார். இந்திரா காந்தியை எதிர்த்து மொரார்ஜி தேசாய் விலகியதால் இவரும் காங்கிரஸில் இருந்து விலகி கி.பி.1971ல் இந்திரா அலையில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியுற்றார். பின்னர் அடுத்த நடந்த சட்டமன்ற தேர்தலிலும் தோல்வியுற காங்கிரஸ் கட்சிக்கே திரும்பினார். கி.பி.1977ல் காங்கிரஸ் கட்சி சார்பாக பெகுசராய் தொகுதியில் போட்டியிட்டு ஜனதா அலையில் தோல்வியுற்றார். பின்னர் நவம்பர் 1978ல் சமஸ்திபூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு அதிலும் தோல்வியுற்ற பின்னர் அரசியலிருந்து விலகினார். அதன் பின்னர் சமூக பணிகள் ஆற்றினார். தனது இறந்த சகோதரர் நினைவாக துளசிகரில் ஒரு மருத்துவமனையை 25 லட்சம் செலவில் ஏற்படுத்தி இலவச சிகிச்சையை ஏற்படுத்தி கொடுத்தார். நாலந்தாவிலுள்ள சண்டி மற்றும் ஹர்நாட் கிராமத்திற்கு சாலை அமைக்க ஏற்பாடு செய்தார். தனது 80வது வயதில் புது டெல்லியில் கி.பி.2007 ஆகஸ்ட் 14 அன்று மறைந்தார்.

Comments

Popular posts from this blog

135) கங்கா தேவி

137) காளி பாய்

முன்னுரை