90) இராணி கர்ணாவதி

இராணி கர்ணாவதி ( ??? - கி.பி.1534) :


இந்திய வரலாற்றில் மானத்தை விட உயிர் முக்கியமில்லை என்று உணர்த்திய ராணிகளுள் ஒருவர். இரா‌ஜபுத்ரர்களின் மாவீரர்களுள் ஒருவரான ராணி சங்காவின் மனைவி. இவரது மகன் முதலாம் உதய் சிங் மூலம்‌ பிறந்த பேரனே சரித்திரம் போற்றும் மகாவீரரான ராணா பிரதாப் சிங்.

இவர் இராஜபுதனத்தின் பூண்டி இளவரசி. பின்னர் மேவாரின் ராணா சங்கராம்சிங் (ராணா சங்கா)யை கி.பி.1508ல் திருமணம் செய்தார். ராணா சங்காவின் முதல் மனைவி மூலம் பிறந்த மகனான போஹ்ராஜ்சிங் (இவர் பக்த மீரா பாயின் கணவர்) கி.பி.1521ல் போரில் இறந்து விடவே ராணா சங்காவின் மறைவுக்கு பின்னர் இவரது மகனான விக்ரமாதித்யா ஆட்சியேறினார். கோழையான விக்ரமாதித்யாவால் ஆட்சியை ஒழுங்காக நடத்த தெரியவில்லை. மீண்டும் குஜராத்தின் பகதூர் ஷா சித்தூரை தாக்கினார். அவரிடம் விகரமாதித்யா தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து நிற்க கோழையான விக்ரமாதித்யாவுக்கு துணையாக நிற்க எந்த இராஜபுத்ர கிளைகளும் தயாராகவில்லை. சிதோதையர்களின் வம்ச பெருமையை எடுத்து கூறி ஒவ்வொருவரையும் போருக்கு திரட்டினார். ஆனாலும் விக்ரமாதித்யா மற்றும் இன்னொரு மகனான சிறுவன் முதலாம் உதய் சிங் (ராணா பிரதாப் சிங்கின் தந்தை - இந்த போர் நிகழ்வில் தான் தாதி பன்னாபாய் உதய் சிங்கை காப்பாற்ற தன் மகனை பலிகொடுத்து ராஜபுத்ர வம்சத்தை காப்பாற்றினார்) ஆகியோரை பாதுகாப்புக்காக உதய்ப்பூருக்கு அனுப்பி வைத்தார். ராணி கர்ணாவதி பாபரின் மகனான ஹூமாயூனுக்கு சகோதரிகள் அனுப்பும் ராக்கி கயிறை அனுப்பி உதவிக்கு வருமாறும் கேட்க அவர் வராவதற்குள் போர் முடிந்து ராணி கர்ணாவதி ஜோஹர் (தீக்குளிப்பு) செய்து கொண்டார் என்றும் பிற்கால கட்டுக்கதைகள் கூறுகின்றன. ஆனாலும் சதீஷ் சந்திரா முதலிய வரலாற்று அறிஞர்கள் இது அப்பட்டமான கட்டுக்கதை என்றும் வரலாற்றில் திணிக்கப்பட்ட நிகழ்வு என்றும் கூறுகின்றனர். ஆனாலும் இந்த ராக்கி கயிறு கட்டும் நிகழ்வு ரக்ஷ்ஷா பந்தன் நிகழ்வோடு தொடர்பு படுத்தப்படுகிறது. போரில் சித்தூர் தோல்வியுற மார்ச் 8, 1534ல் கோட்டைக்குள் குஜராத்தின் பகதூர் ஷா படைகள் நுழைவதற்கு முன்பு தனது பெருமையையும் மானத்தையும் காத்து கொள்ள ராணி கர்ணாவதி மற்றும் இதர பெண்கள் ஜோஹர் (தீக்குளிப்பு) செய்து கொண்டு உயிர் விட்டனர். இது சித்தூரில் சரித்திரத்தில் பதிவான 3 ஜோஹர் நிகழ்வுகளில் இது இரண்டாவது. முதல் நிகழ்வு அலாவுதீன் கில்ஜி படையெடுப்பின் போது ராணி பத்மினி ஜோஹர் செய்து கொண்டது. குஜராத்தின் பகதூர் ஷா படையெடுப்பின் போது ராணி கர்ணாவதி ஜோஹர் இரண்டாவது நிகழ்வு. பின்னர் அக்பரின் படைகள் சித்தூரை தாக்கும்போது நடந்தது மூன்றாவது ஜோஹர் நிகழ்வு நடந்தது. உயிரை விட வீரத்தையும் மானத்தையும் பெரிதாக நினைத்து இராஜபுத்ர பெண்கள் உயிர்விட்டது அவர்களின் தியாகத்தையும் கற்பின் மாண்பையும் விளக்குகிறது. இயற்கையிலையே இராஜபுத்ர பெண்கள் வீரமும் தியாகமும் ஒருங்கே அமைந்தவர்கள். இந்த நிகழ்வின் போது தன் மகனை இழந்து பிற்கால ராணா உதய் சிங்கை காப்பாற்றி பாதுகாப்பாக உதய்ப்பூருக்கு அழைத்து சென்று சீதோதையர்களின் வம்சத்தை காப்பாற்றிய ராணி கர்ணாவதியின் தாதி பெண் பன்னா பாய் முதலிய பெண்களும் தியாகத்தின் சிகரத்தில் நிலைத்து நிற்கின்றனர்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்