94) பினா தாஸ்

பினா தாஸ் (கி.பி.1911-1986) :


இந்திய வரலாறு கண்ட வீரபெண்மணிகளுள் ஒருவர். இளமையிலையே தேசிய உணர்வினால் புரட்சிகர அமைப்பில் இணைந்து கல்கத்தா கவர்னரை பட்டமளிப்பு விழாவில் சுட்டு கொல்ல முயன்று பிடிபட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தும் பிறகும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்ட சிறை சென்றவர் இவர். சுதந்திரத்திற்காக மட்டுமல்ல சமூக சேவைகளுக்காகவும் விருது பெற்றவர். இவரை போல இவரது மூத்த சகோதரியும் சுதந்திர போராட்ட களத்தில் இறங்கியவர் தான். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இவரது குடும்ப நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

கி.பி.1911 ஆகஸ்ட் 24ல் வங்காளத்திலுள்ள கிருஷ்ணாநகரில் பெனி மதாப் தாஸ் - சரளா தேவிக்கும் மகளாக பிறந்தார். இவரது மூத்த சகோதரியான கல்யாணி தாஸ் பட்டாச்சார்யாவும் சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டவர் தான். இவர் கல்கத்தாவிலுள்ள செயிண்ட் ஜான்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பின்னர் கல்கத்தாவிலுள்ள பெத்யூன் கல்லூரியிலும் படித்தார். இவர் பெண்களுக்கான புரட்சிகர அமைப்பான "சத்ரி சங்கத்தின்" உறீப்பினராக இருந்தார். 

கி.பி.1932 பிப்ரவரி 6ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு நடந்தது. அந்த மண்டபத்தில் வங்காள கவர்னரான ஸ்டான்லி ஜாக்சனை கொல்ல திட்டமிட்டனர். இதற்கு இன்னொரு பெண் புரட்சியாளர் கமலா தாஸ் குப்தா இவருக்கு துப்பாக்கி சப்ளை செய்தார். மண்டபத்தில் வைத்து கவர்னரை நோக்கி 5 முறை சுட்டார். ஆனாலும் துப்பாக்கி குண்டு குறி தவறியதாலும் லேசான காயத்தாலும் கவர்னர் உயிர் பிழைத்தார். பின்னர் இவர் பிடிபட்டார். இவரது வாக்குமூலம் பிரிட்டிஷ் அரசால் தணிக்கை செய்யப்பட்டது. இந்திய தண்டனை சட்டத்தின் 307வது பிரிவின் படி இவருக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இவரது பட்டம் நிறுத்தி வைக்கபப்ட்டது. பின்னர் 80 ஆண்டுகள் கழித்து கி.பி.2011ல் இவரது பட்டத்திறக்கும் பிரிதிலதா வதேதார் பட்டத்திறகும் இருந்த தடையை கல்கத்தா பல்கலைக்கழகம் நீக்கியது. கி.பி.1941ல் சிறையிலிந்து வந்த இவர் காங்கிரஸில் இணைந்து சுதந்திர போராடட்த்தில் ஈடுபட்டார். கி.பி‌.1942 லவ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு கி.பி.1945 வரை சிறையில் இருந்தார். பின்னர் சுதந்திரத்திற்கு பிக்ஷது மாகாண சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கி.பி.1947ல் ஜூகாந்தர் புரட்சிகர குழுவின் உறுப்பினரான சுதந்திர போராட்ட வீரர் ஜதீஷ் சந்திர பெளமிக்கை திருமணம் செய்தார்.‌ காங்கிரஸை விட்டு விலகி இடதுசாரி போராட்ட களத்தில் இணைந்தார். கம்யூனிஸ்ட் கட்சியில் சேரவில்லை என்றாலும் அதன் கொள்கைகளால் கவரப்பட்டார். இவருக்கு கி.பி.1960ல் சமூக சேவைக்காக பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. அவரது கணவரின் மரணத்திற்குப் பின்னர் ரிஷிகேஷ் நகரில் தனிமையான வாழ்க்கையை நடத்தினார். கி.பி.1986 டிசம்பர் 26ல் பேருந்து நிலைய சாலையோரத்தில் அடையாளம் தெரியாத வகையில் மயங்கி விழுந்து கிடந்தார். சுயநினைவற்ற கிடந்த இவர் காவல்துறையினரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவரது உயிர் மருத்துவமனையில் பிரிந்தது. நாட்டின் விடுதலைக்காக போராடி கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் தனது இளமை பருவம் முழுவதையும் சிறையில் கழித்தும் மக்களின் வாழ்வுக்காக சமூக சேவைகளில் ஈடுபட்ட இந்த தூய உள்ளம் அடையாளம் தெரியாத வகையில் மாண்டு போனது தான் துன்பவியல் சம்பவம்.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்