97) அனுசுயாபென் சாராபாய்

அனுசுயாபென் சாராபாய் (கி.பி.1885-1972) :


இந்தியாவில் முதன்முதலில் பெண் தொழிலாளர்கள் சங்கம் அமைத்து தொழிற்சாலைகளில் பெண்களுக்கு கல்வி மற்றும் இதர வசதிகளுக்காக போராடியவர். காந்தியடிகளால் மஜ்தூர் சங்கத்தின் வாழ்நாள் தலைவராக நியமிக்கப்படும் அளவுக்கு பெண்களின் கல்வி மற்றும் அவர்களின் நலனுக்காக போராடியவர். இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சிகளின் தந்தையாக கருதப்படும் "விக்ரம் சாராபாய்" அவர்களின் அத்தை. 

இவர் கி.பி.1885 நவம்பர் 11ல் அகமதாபாத்தில் தொழிலதிபர் மற்றும் வணிக குடும்பமான சாராபாய் குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு 9 வயதாக இருக்கும்போது இவரது பெற்றோர்கள் மறைந்ததால் இவரும் சகோதரர் மற்றும் தங்கை ஆகியோர் இவரது மாமாவால் வளர்க்கப்பட்டனர். இவருக்கு 13 வயதாக இருக்கும்போது குழந்தை திருமணம் நடந்து அது தோல்வியில் முடிந்ததால் சொந்த குடும்பத்திற்கு திரும்பினார். கி.பி.1912ல் சகோதரரின் உதவியுடன் மருத்துவம் பயில இங்கிலாந்து சென்றவர் மருத்துவத்தில் விலங்குகளின் உடற்கூறுகளை அறிய அதை வெட்டுவது போன்றவை தனது சமண நெறிக்கு முரண்பட்டதாக இருந்ததால் மருத்துவ கல்வியை கைவிட்டு எக்கானமிக்ஸ் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் கல்லூரிக்கு மாறினார். இங்கிலாந்தில் இருந்த சமயத்தில் மரியாதைக்குரிய சந்திப்புகளில் நடனமாடவும் புகைபிடிக்கவும் ஆரம்பித்தார். இங்கிலாந்தில் இருந்த சமயத்தில் சோஷலிஸம் கருத்துகளை கொண்ட பேபியன் இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டார். பெண்களின் உரிமை பற்றிய கருத்தரங்குகளில் கலந்து கொண்டார். பின்னர் குடும்பசூழல் காரணமாக 1913ல் இந்தியா திரும்பினார்.

இந்தியா திரும்பிய அவர் மில் தொழிலாளர்களின் மத்தியில் அவர்களின் கல்வியை பற்றி பேசினார். இந்த சமயத்தில் இவர்களது குடும்பத்திற்கு சொந்தமான காலிகோ ஜவுளி தொழிற்சாலைகளில் அதிகப்படியான வேலை நேரம் முடிந்து அவர்கள் ஜவுளி தொழில் பணி முடிந்து வெளியே வரும்போது மிகவும் களைத்து போய் இருப்பதை உண்ர்ந்து அவர்களுக்காக பாடுபட உறுதி கொண்டார். கி.பி.1914ல் அகமதாபாத்தில் நடந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தில் அவர்களை ஒற்றுமையாக ஈடுபட பாடுபட்டார். 21 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தின் விளைவாக இவரது சகோதரருக்கும் இவருக்கும் மனவருத்தம் ஏற்பட்டது. பின்னர் 1917ல் அகமதாபாத்தில் ப்ளேக் நோய் தாக்கத்தினால் தொழிலாளர்கள் வெளியே செல்லுவதை தவிர்க்க அவர்களுக்கு 50% ப்ளேக் போனஸ் கொடுக்கப்பட்டது. ப்ளேக் நோய் முடிந்தவுடன் போனஸ் தொகையை நிறுத்தியதால் ஊழியர்கள் வருமான இழப்புக்கு உள்ளாகினர். இதனால் மீண்டும் 1918ல் நெசவாளர்களுக்கு 50% ஊதிய உயர்வு கேட்டு நடந்த போராட்ட முடிவில் 20% ஊதிய உயர்வு தர மில் முதலாளிகள் ஒப்புக்கொண்டனர். இந்த நேரத்தில் குடும்ப நண்பராக இருந்த காந்தியடிகளின் ஆலோசனைகள் கிடைத்தது. ஆனாலும் 20% ஊதிய உயர்வை ஒப்புக்கொள்ளாமல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜவுளி முதலாளிகளின் சங்கத்திற்கு இவரது சகோதரர் அம்பாலால் தலைவராகவும் இவர் தொழிலாளர்களின் சார்பாகவும் இருந்தார். காந்தியின் குடும்பத்தினரும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தனர். தொழிலாளர்களை அமைதியான முறையில் போராடவும் சொல்லி கொடுத்து தினமும் வேலை நிறுத்த பதாகைகள் ஏந்தி அமைதி ஊர்வலம் நடத்த வைத்தனர். வேலை நிறுத்த போராட்டத்தால் சகோதரன் சகோதரிக்கு இடையே விரிசல் ஏற்பட்டது. அம்பாலால் காந்தியின் மீது பெருமதிப்பு கொண்டவர். இதனால் தினமும் இவர்களை சபர்மதி ஆசரமத்திற்கு வரவழைப்பார். சகோதரனுக்கு இவரை உணவை பரிமாற வைப்பார். இதனால் மெல்ல மெல்ல இருவருக்கும் பிணைப்பு ஏற்ப்பட்டது.  கடைசியில் காந்தியின் யோசனைப்படி 35% ஊதிய உயர்வு தொழிலாளர்களுக்கு கிடைத்தது. காந்தியின் மக்கள் கூட்டங்களுக்கு இவர் ஏற்பாடுகள் செய்து கொடுத்தார். கி.பி.1920ல் அகமதாபாத் ஜவுளி தொழிலாளர்கள் சங்கம் (மஜ்தூர் மகாஜன் சங்கம்) உருவாக்கப்பட்டது. காந்தியடிகள் இவரை அந்த சங்கத்தின் வாழ்நாள் தலைவராக்கினார். அது முதல் தன் வாழ்நாள் முழுவதும் ஜவுளி தொழிலாளர்களின் கோரிக்கையில் அவர்களுக்கான உரிமையை பெற்று தருவதற்கு போராடினார். காந்தியடிகள் அகமதாபாத்தில் சபர்மதி ஆஸ்ரமம் அமைக்க உதவிகள் செய்தார். கி.பி.1927ல் ஜவுளி தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்காக "கன்யாகுரு" என்ற பள்ளிக்கூடத்தை தொடங்கினார். இவர் அனைவராலும் "மோட்டாபென்" என்ற பெயரில் மூத்த சகோதரி என்று அழைக்கப்பட்டார். இவரை பின்பற்றி 2 இலட்சம் ஜவுளி தொழிலாளர்கள் இருந்தனர்.  கி.பி.1972 நவம்பர் 1ல் தனது 87வது வயதில் அகமதாபாத்தில் மறைந்தார். வணிக மற்றும் பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் அடிப்படை மக்களின் கல்வி மற்றும் தொழிலாளர்களின் உரிமைக்காக களத்தில் இறங்கி அவர்களின் நலனுக்காக உண்ணாவிரத போராட்டங்கள் கூட தனது சொந்த சகோதரனாக இருந்தாலும் அவரை எதிர்த்து போராடி தொழிலாளர்களின் உரிமையை பெற்று கொடுத்த இவர் உண்மையிலையே தியாக பெண்மணிகளுள் ஒருவராக கருதப்படுகிறார்.

Comments

Popular posts from this blog

135) கங்கா தேவி

137) காளி பாய்

முன்னுரை