98) விஜயலெட்சுமி பண்டிட்

விஜயலெட்சுமி பண்டிட் (கி.பி.1900-1990) :


பிரபலமான ஜவஹர்லால் நேரு குடும்பத்திலிருந்து வந்து காங்கிரஸ் தலைவராகவும் ஜக்கிய நாடுகள் சபையின் முதல் பெண் தலைவராகவும் பணியாற்றியவர் இவர். இவர் ஜவஹர்லால் நேருவின் சகோதரி. 



கி.பி.1900ல் ஆகஸ்ட் 18ல் அலகாபாத்தில் (பிரயாகை) மோதிலால் நேரு - ஸ்வரூப் ராணி தம்பதியருக்கு மகளாக பிறந்தார். காஷ்மீரி பண்டிட் குடும்பத்தை சேர்ந்த இவர் கி.பி.1919ல் முஸ்லீம் பத்திரிக்கையாளரும் எகிப்துக்கான முதல் இந்திய தூதருமான ஹூசைன் என்பவரை ரகசிய திருமணம் செய்தார். இந்த திருமணத்தை பண்டித ஜவஹர்லால் நேரு மற்றும் காந்தி ஆகியோர் பிரித்தனர். பின்னர் சகோதரரின் ஏற்பாட்டின்படி கி.பி.1921ல் குஜராத்தின் கத்தியவார் பகுதியை சேர்ந்த பாரீஸ்டர் பட்டம் பெற்ற ரஞ்சித் சீதாராம் பண்டிட் என்பவரை மணந்தார். இவரது கணவரான ரஞ்சித் சீதாராம் பண்டிட் என்பவரே காஷ்மீரத்தின் வரலாற்றை கூறும் நூலான ராஜதரங்கிணியை சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்.  சுதந்திர போராட்டத்தில் சிறை சென்ற விஜயலெட்சுமி பண்ணிட்டின் கணவர் லக்னோ சிறையில் கி.பி.1944ல் இறந்தார். தம்பதியர்களுக்கு சந்திரலேகா மேத்தா, நயன்தாரா சாகல் மற்றும் ரீட்டா தார் என்று 3 பெண் குழந்தைகள் உண்டு. இதில் நயன்தாரா சாகல் என்பவரே நேராவின் 17 ஆண்டுகள் ஆட்சிகால வரலாற்றை திறனாய்வு செய்து வெளியிட்டவர்.

கி.பி.1932ல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவித்தார். மீண்டும் 1942ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை தண்டனை பெற்றார். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை தண்டனை பெற்ற இவரது கணவர் லக்னோ சிறையிலையே மரணமடைந்தார். பின்னர் உத்திரப்பிரதேசத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல் பெண் மந்திரியாக ஆனார். சுதந்திரம் பெற்ற பின்னர் பல நாடுகளில் வாஷிங்டன், மாஸ்கோ மற்றும் மெக்சிகோ நாட்டில் இந்திய தூதராக பணியாற்றியுள்ளார். இந்த நேரத்தில் விமான விபத்தில் இறந்ததாக கூறப்பட்ட நேதாஜி சுபாஸ் சந்திர போஸை சந்தித்ததாகவும் ஒரு கூட்டத்தில் "நான் ஒரு தகவலை வெளியிட்டால் இந்தியாவே அதிரும்" என்று இதை தான் குறிப்பிட்டதாக நேதாஜி மரணம் பற்றிய விசாரணை கமிஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. 

இவர் ஜக்கிய நாடுகளின் சபையின் தலைவராக கி.பி.1953-54 ஆண்டில் இருந்தார். ஜ.நா. சபையின் முதல் பெண் தலைவர் மட்டுமல்ல 8வது தலைவராக இருந்தார். பின்னர் கி.பி.1962-64 வரை மகாராட்டிர மாநில கவர்னராக இருந்தார். நேரு மறைந்தவுடன் அவரது தொகுதிக்கான பெல்பூர் மக்களவைக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும் சில காலத்தில் ராஜினாமா செய்தார். பின்னர் கி.பி.1967-71 வரை மக்களவையின் உறுப்பினராக இருந்தார். இவரது மருமகளான இந்திரா காந்தியுடன் எமர்ஜென்சி நேரத்தில் இவர் முரண்பட்டு நின்றார். அவரது கொள்கைகளை விமர்சித்தார். பின்னர் கி.பி.1979ல் இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கு நின்றவர் இந்திராகாந்தி நிறுத்திய வேட்பாளரால் தோல்வியுற்ற பின்னர் அரசியலில் இருந்து விலகினார். பின்னர் கி.பி.1979ல் அரசியலை விட்டு விலகி டெஹ்ராடூனில் வசித்து வந்தார். பின்னர் கி.பி.1979ல் ஜ.நா.சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் இந்தியாவின் சார்பில் உறுப்பினராக இருந்தார். இவர் The Evolution of India (1958) மற்றும் The Scope of Happiness: A Personal memoir (1979) என்று இரு நூல்களை எழுதினார். தனது 90வது வயதில் கி.பி‌1990 டிசம்பர் 1ல் டெஹ்ராடூனில் மறைந்தார்.

Comments

Popular posts from this blog

135) கங்கா தேவி

137) காளி பாய்

முன்னுரை