5) ஹடி ராணி



ஹடிராணியின் உண்மையான பெயர் சாஹல் கன்வர். இவர் இராஜஸ்தானிலுள்ள ஹடா செளகான் அரசரின் மகள். இவரை மேவார் சாலும்பரா வம்சத்தின் தளபதியான சுன்டாவத் கிளை மரபை சேர்ந்த தளபதியான ரத்தன் சிங் என்பவருடன் திருமணம் முடிந்தது. ரத்தன் சிங் மேவாரை ஆண்ட முதலாம் ராஜ் சிங் (கி.பி.1653-1680) அவர்களிடம் தளபதியாக இருந்தார். இந்த நேரத்தில் அஜ்மீரின் மொகலாய கவர்னர் மேவார் இராஜ்ஜியத்தின் மீது படையெடுத்துவர மேவாரின் ராணா ராஜ் சிங் ரத்தன் சிங்கை படையெடுத்து செல்லுமாறு கூற ரத்தன் சிங் புதியதாக திருமணம் முடிந்த காரணத்தால் தயங்கினார். மனைவி ஹடி ராணியிடம் இதை பற்றி சொல்ல அவர் தன்னையும் போருக்கு அழைத்து செல்ல கூறினார். இவர் போர் களத்தை பற்றி விவரித்து விட்டு புதிதாக திருமணம் ஆனதால் தயங்குவதாக கூறினார். இதை உணர்ந்த ஹடி ராணி இராஜபுத்ரரின்  முதல் கடமை தாய் நாட்டை காப்பது தான் அதை தன் கணவர் செயல்படுத்த களத்தில் இறங்க தான்  தடையாக இருப்பதை உணர்ந்து தன் பணியாளரை அழைத்து தன் தலையை சீவியவுடன் அதை தட்டில் வைத்து தனது கணவருக்கு கொடுக்க சொல்லி விட்டு தன் தலையை தன் வாளால் தானே அறுத்துக்கொண்டார். பணியாளர் கொண்டு வந்த தட்டை ரத்தன் சிங்கிடம் காட்ட அதை கண்டு கதறி அழுதவர் தனது மனைவியின் தியாகம் வீணாக கூடாது என்று முடிவு எடுத்து படை திரட்டி மொகலாயர்களின் அஜ்மீர் கவர்னரின் படைகளை ஓட ஓட விரட்டியடித்து வெற்றி கண்டார். வெற்றி அடைந்தவுடன் தனது மனைவி இல்லாமையை உணர்ந்து அவரும் தன் கழுத்தை அறுத்து கொண்டு உயிர் துறந்தார். இவரது தியாகம் நாட்டுப்பற்று ஆகியவை போற்றுதலுக்குரியது. இதனால் இராஜஸ்தான் காவலர்களின் பெண்கள் பிரிவுக்கு "ஹடி ராணி மகிளா பட்டாலியன்" என்று இவரது பெயரை சூட்டியுள்ளனர். இவரை பற்றி திரைப்படம் எடுக்கும் முயற்சி ராணி பத்மாவத் திரைப்படம் சந்தித்த பிரச்சினைகளால் இவரை பற்றி படமெடுக்கும் முயற்சி நிறுத்தப்பட்டது. இராஜஸ்தான் மாநிலம் நாகோர் நகரில் இன்றும் இவரது மஹால் உள்ளது. அது வண்ணமயமான ஒவியங்களாலும் கலைநயமிக்க தூண்களாலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்