140) துர்காபாய் தேஷ்முக்

 துர்கா பாய் தேஷ்முக் (கி.பி.1909-1981) :

இந்திய பெண்கள் ஆந்திர மாநிலத்தில் முதன்முதலில் ஆந்திர மகிளா சமிதி (மகளிர் மாநாடு) அமைத்து பெண்ணுரிமை மற்றும் பெண் சமூக நீதிக்காக போராடியது மட்டுமல்லாது ஆங்கில வழிக் கல்வியை எதிர்த்துப் படிப்பை 12 வயது பள்ளியை விட்டு வந்த இவர் பின்னர் சட்டப் படிப்பு படித்து வழக்கறிஞராகப் பணியாற்றியவர். குழந்தை திருமணத்தை எதிர்த்து தான் குழந்தையாக இருந்தபோது திருமணத்தை எதிர்த்து வெளியேறிய பின்னர் தன் மனதுக்கு பிடித்த நேரு அமைச்சரவையில் இருந்த இந்திய நிதியமைச்சர் திருந்தாவன் தேஷ்முக்கை திருமணம் செய்தவர். எந்த வித சூழ்நிலையிலும் பெண் கல்வி மற்றும் பெண்ணுரிமையை விட்டு கொடுக்காமல் பெண்களுக்கு மாநாடு அமைத்து வழி நடத்திய வீரப்பெண்மணி இவர்.

இவர் கி.பி.1909 ஜூலை 15ம் தேதி இன்றைய ஆந்திர பிரதேசத்தில் உள்ள இராஜமுந்திரியில் பிராமண சமூகத்தில் கும்மிடிதாலா குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு எட்டு வயதாக இருக்கும்போது உறவினரான சுப்பராவுடன் குழந்தை திருமணம் நடந்தது. ஆனால் இவர் வளர்ந்ததும் குழந்தை திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் வாழ மறுத்து விட்டார். ஆனாலும் பின்னாட்களில் விதவையான சுப்பராவின் மனைவியை இவர் ஆதரித்து தன்னுடன் காப்பாற்றினார். கி.பி.1953ல் அப்போதைய நித்தியமைச்சர் சிந்தாமன் தேஷ்முக்கை மணந்தார். 

இவர் தனது 12 வயதில் ஆங்கில வழி கல்வியை திணிப்பதை எதிர்த்து பள்ளியை விட்டு வெளியேறினார். பின்னர் சிறுமிகளுக்கு இந்தி கல்வியை அளிக்க இராஜமுந்திரியில் பாலிகா இந்தி பாடசாலையை தொடங்கினார். இவருக்கு 14 வயதில் கி.பி.1923ல் காக்கிநாடாவில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் தன்னார்வலராக இருந்தார். காதி கண்காட்சியின் பொறுப்பாளராக இருந்த இவர் டிக்கெட் எடுக்காமல் ஜவஹர்லால் நேருவை உள்ளே அனுமதிக்க மறுத்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இவரை கண்டித்த போது எனக்கு கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் படி தான் நடந்தேன் அப்படி தான் நடப்பேன் என்று உறுதியாக கூற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நேருக்கு டிக்கெட் எடுத்து பின்னரே உள்ளே அனுமதித்தார். நேரு இவரின் துணிச்சலை மிகவும் பாராட்டினார். இதன் காரணமாகவே பின்னாளில் இந்திய அரசியல் நிர்ணய சபை மற்றும் திட்டக்குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும் நேரு நியமித்தார்.

இந்திய விடுதலைக்கான போராட்டத்தில் இவர் மகாத்மா காந்தியை பின்பற்றியவர். சட்டமறுப்பு இயக்கத்தின் போது காந்தி தலைமையிலான உப்பு சத்தியாகிரக நடவடிக்கைகளில் பங்கேற்றார். 1930-33 வருடங்களில் மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்ததும் ஆந்திர பல்கலைகழகத்தில் பி.ஏ. மற்றும் எம்.ஏ படித்து முடித்தார். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி தொடங்கினார். பார்வையற்றோர் நிவாரண சங்கத்தின் தலைவராக இருந்த போது அவர்களுக்காக ஒளி பொறியியல் பட்டறையை அமைத்தார். கி.பி.1952 பாராளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படாததால் திட்டகமிஷனில் உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார். இவரின் முயற்சியால் கி.பி.1953ல் மத்திய சமூக நல வாரியம் நிறுவப்பட்டது. கி.பி.1953ல் சென்னை மாகாணத்தில் இருந்து அரசியல் நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மகளிர் நலனுக்காக பாடுபட்டார். கி.பி. 1958ல் தேசிய மகளிர் கல்விக்கான தேசிய வாரியத்தின் தலைவராக ஆனார். கி.பி.1963ல் உலக உணவு காங்கிரஸ் மாநாட்டிற்கு இந்தியாவின் சார்பாக வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்டார். 


இவர் "துர்காபாய் தேஷ்முக் தி ஸ்டோன் தட் ஸ்பீக்கர்" என்ற நூலையும் சுயசரிதையான "சிந்தாமனும் நானும்" என்ற புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது சேவைகளுக்கான பத்ம விபூசன் விருது, நேரு எழுத்தறிவு விருது, யூனெஸ்கோ எழுத்தறிவு விருது, ஜூவன் மற்றும் ஜெகதீஷ் விருதுகளைப் பெற்றுள்ளார். ஆந்திர அரசு விசாகப்பட்டினத்தில் உள்ள மகளிர் ஆய்வுத் துறைக்கு "டாக்டர் துர்கா பாய் தேஷ்முக் மகளிர் ஆய்வு மையம்" என்று பெயர் சூட்டி பெருமைப்படுத்தியது. இவர் கி.பி.1938ல் ஆந்திரா மகிளா சபை, சமூக மேம்பாட்டுக்கான கவுன்சில், கி.பி.1962ல் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனை, புதுடில்லியில் ஸ்ரீவெங்கடேஷ்வரா கல்லூரி மற்றும் கி.பி.1948 ஆந்திரா எஜிகேஷன் சொசைட்டி ஆகியவை இவரால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்புகளாகும். இவர் கி.பி.1981 மே 9ல் தனது 71வது வயதில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள நரசன்னபேட்டாவில் மறைந்தார்.

Comments

Popular posts from this blog

135) கங்கா தேவி

137) காளி பாய்

முன்னுரை