143) லலிதா

லலிதா (கி.பி.1919-1939) : 

இந்திய வரலாற்றில் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி தங்கள் கனவுகளை நோக்கி எதிர்நீச்சல் போட்டு அதை நனவாக்கிய பெண்கள் சிலர் தான். அவர்களுள் ஒருவராக இந்தியாவில் முதன்முதலாக பொறியாளர் (என்ஜினீயர்) பட்டம் பெற்ற பெண்மணியாக தனது பெயரை வரலாற்றில் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார். 15 வயதில் திருமணம் முடிந்து பெண் குழந்தைக்கு தாயாகி 18 வயதில் கணவரை இழந்து விதவையாக ஆன பெண்ணான இவர் உறவினர்களின் எதிர்ப்பை மீறி படித்து படித்து பெற்று என்ஜினீயராக தொழில் செய்தவர்.

இவர் கி.பி.1919 ஆகஸ்ட் 27ம் தேதி சென்னையில் கிண்டி மின் பொறியியல் கல்லூரி மின் பொறியியல் துறையில் போராசிரியராக இருந்த சுப்பாராவ்க்கு 5வது மகளாக பிறந்தார். இவர் 15 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டார். 17வது வயதில் பெண் குழந்தையான சியாமளா பிறந்தார். குழந்தை பிறந்த 4 மாதத்திலையே இவரது கணவர் மறையவே 17வது வயதிலையே  விதவையானார். ஆனால் அதன்பின் மகளின் நிலையை மாற்ற இவரது தந்தை இவரது படிப்பை தொடர ஆதரவு கொடுத்தார். உறவினர்கள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதனை புறக்கணித்து சென்னை ராணிமேரி கல்லூரியில் கி.பி.1939ல் இன்டர்மீடியட் தேர்வில் பட்டம் பெற்றார். அதன்பின்னர் தனது மூத்த சகோதரர்களை போல தானும் பொறியிலளராக ஆகவேண்டும் என்று முடிவு செய்து தந்தையின் கல்லூரியில் படிக்க முடிவு செய்தார். அந்த காலகட்டத்தில் நாட்டில் சில இடங்களில் மட்டுமே பொறியியல் கல்லூரி இருந்தது. அதிலும் சொற்பமான ஆண் மாணவர்கள் மட்டுமே சேர்த்து படித்தனர். அதனால் இவரது விண்ணப்பத்தை என்ன செய்வது என்று முடிவு எடுக்க முடியாமல் கல்லூரி முதல்வர் சாக்கோ மற்றும் இயக்குனர் ஸ்டத்தாம் ஆகியோர் இவரது தந்தையிடம் ஆலோசனை செய்து முடிவில் மின் பொறியியல் கல்லூரியில் சேர இவருக்கு அனுமதி கிடைத்தது. கி.பி.1940ல் கிண்டி பொறியியல் கல்லூரியில் ஒற்றை பெண்ணாக கல்லூரியில் படிக்க ஆரம்பித்தார். பின்னர் விடுதியில் தனியாக இருப்பது சற்று அசெளர்யமாக இருப்பதாக உணர்ந்து தனது தந்தையிடம் தெரிவிக்க  போராசிரியரான சுப்பாராவ் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி பெண்களும் பொறியியல் படிப்பை படிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட வைத்தார்.  இதனால் லீலாமா ஜார்ஜ் மற்றும் பி.கே.ரேசியா ஆகியோரும் சிவில் என்ஜினியங் படிப்பில் இவருக்கு ஜூனியராக சேர்ந்து படிக்க ஆரம்பித்தனர். இவரது மகளான சியாமளா தனது தாய்மாமாவின் வளர்ப்பில் வளர்ந்து வந்தார். ஒவ்வொரு வார இறுதியிலும் மகளை சென்று பார்த்து வந்தார். பின்னாளில் இவரின் மகளான சியாமளா அறிவியல் துறையில் பட்டம் பெற்று கணித ஆசிரியையாக ஆனார். சிறுமியாக இருந்த மகளை பார்த்துகொண்ட மைத்துனி பின்னாளில் இவருக்கு உதவியாக கடைசி காலம் வரை இருந்தார்.  கி.பி.1944ல் இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த போது பல்கலைக்கழகம் பொறியியல் படிப்பின் கால அளவை குறைக்க முடிவு செய்தது. அதன்படி லலிதா மற்றும் அவரின் ஜூனியர்கள் இருவரும் கி.பி.1944ல் பொறியாளர் பட்டம் பெற்றனர்.

பின்னர் இவர் சிம்லாவில் மத்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பில் பணியில் சேர்ந்தார். பின்னர் தந்தையுடன் பணியில் சேர்ந்து மின் இசைக்கருவி மற்றும் புகையற்ற அடுப்பு ஆகியவற்றை தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். கி.பி.1948 ஆண்டு முதல் அசோசியேட்டட் எலெக்ட்ரிக்கல் இண்டஸ்டிரீஸ் கம்பெனியில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார். இந்த கம்பெனியின் சார்பாக இந்தியா முழுவதும் சப் ஸ்டேஷன் வடிவமைப்பு மற்றும் ஜெனரேட்டர் வடிவமைப்பு என பல திட்டங்களில் இணைந்து செயல்பட்டார். புகழ்பெற்ற பக்ரா நங்கல் அணையின் ஜெனரேட்டர்கள் இவர் வடிவமைத்தவை தான். கி.பி.1964ல் நியூயார்க் நகரில் நடந்த பெண் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் சர்வதேச மாநாட்டிற்கு அழைக்கப்பட்டார். கி.பி.1953ல் லண்டன் மின் பொறியாளர்கள் கவுன்சில் இவரை ஒரு இணை உறுப்பினராக தேர்தெடுத்து பின்னர் கி.பி.1966ல் முழு உறுப்பினராக உயர்த்தியது. கி.பி.1965ம் ஆண்டு லண்டன் பெண் பொறியாளர்கள் சொசைட்டி மற்றும் இன்ஸ்டியூஷன் ஆஃப் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர்ஸ் ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார். முப்பது ஆண்டுகள் AEI நிறுவனத்தில் பணியாற்றி கி.பி.1977ல் ஒய்வு பெற்றார். இவர் கி.பி.1979ல் மூளை அனரிஸம் நோயால் தனது 60வது வயதில் மறைந்தார். இவர் கி.பி.1964ல் நடந்த பெண் பொறியாளர் மற்றும் விஞ்ஞானிகளின் மாநாட்டில் " நான் 150 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திருந்தால் என் கணவரின் சிதையுடன் எரிந்து போயிருப்பேன். பெண்கள் இன்னும் கல்வி மற்றும் பொறியியல் படிப்புகளில் ஆர்வமாக சேரவும் வேலை வாய்ப்புகளை பெறவும் முன்வர வேண்டும்" என்று ஊக்குவித்தார். அவரின் கனவு இன்று நனவாகி இன்று பொறியியல் படிப்புகளில் எல்லா துறைகளிலும் பெண்கள் ஆண்களுக்கு சரிநிகர் சமானமாய் போட்டி போட்டுக்கொண்டு வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். பொறியியல் துறையில் இன்றைய பெண்களுக்கு இவர் வழிகாட்டி என்று சொன்னால் மிகையாகாது.

Comments

Popular posts from this blog

145) குந்தள குமாரி சபத்

146) அம்மு சுவாமிநாதன்

137) காளி பாய்